மத்தியில் பாரதிய ஜனதா கட்சியால் மட்டுமே நிலையான, நல்லாட்சியை தரமுடியும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்தியா முழுவதுமான மக்களவை தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெறுகிறது. இந்நிலையில், தேர்தலுக்கான பிரட்சரங்கள் நாடுமுழுவதும் சூடுபிடித்து வருகின்றது. இதை தொடர்ந்து, சமாஜ்வாதி கட்சியினருடன் காங்கிரஸ் கட்சியினர் ரகசிய கூட்டணி அமைத்து, மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியை அழிக்க நினைக்கிறது. பாவம் இது மாயாவதிக்கு தெரியவில்லை என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.


உத்தரபிரதேச மாநிலம் பிரதாப்கரில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் பங்கேற்ற பிரதமர் மோடி பிசுகையில், எதிர்க்கட்சிகள் அமைத்துள்ள மகா கூட்டணி, ஊழல் கூட்டணியாக மாறி உள்ளது என்றார். மத்தியில் ஆட்சி அமைப்போம் என்று கூறிய காங்கிரஸ் இப்போது, பாஜகவின் ஓட்டுகளை பிரிப்போம் என்ற நிலைக்கு இறங்கி விட்டதாக அவர் விமர்சித்தார்.


ஊழல் கறை படியாதவர் என்று வர்ணிக்கப்பட்ட ராஜீவ் காந்தி பின்னர் போபர்ஸ் ஊழல் குற்றசாட்டுக்கு உள்ளானதை அவர் நினைவு கூர்ந்தார். மத்தியில் பாரதிய ஜனதாவால் மட்டுமே நிலையான, ஊழலற்ற நல்லாட்சியை தர முடியுமென மோடி தெரிவித்தார். அப்போது கூட்டத்தில் பங்கேற்றவர்கள் மீண்டும் மோடி ஆட்சி என முழக்கமிட்டனர்.