உலகப் புகழ்பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கொரோனா தொற்று காரணமாக  2 ஆண்டுகளாக தரிசனங்கள் மற்றும் சிறப்பு தரிசனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. இதையடுத்து தற்போது சில மாதங்களுக்கு முன்பு தேவஸ்தானம் திறக்கப்பட்டு பொது மக்கள் தரிசனம் செய்வதற்கு அனுமதி கிடைத்தது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கொரோனா தொற்றுக்கு முன்பு வரை முதியோர், மாற்றுத்திறனாளிகள், ஒரு வயதுக்குட்பட்ட கைக்குழந்தையுடன் வரும் பெற்றோர்கள் சிறப்பு நுழைவு வாயில் வழியே செல்வதற்கு அனுமதிக்கப்பட்டனர். அதன் பிறகு, தற்போது கொரோனாவின் தாக்கம் குறைந்து கட்டுப்பாடுகள் முற்றிலும் நீக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் நீண்டகால தீராத நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு திருப்பதி ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு செய்வதற்கான கோட்டா இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 10 மணிக்கு வெளியிடப்பட்டது.