இலங்கை பிரதமர் ராஜபக்ச 4 நாள் பயணமாக இந்தியா வந்தடைந்தார்..!
4 நாள் பயணமாக இந்தியா வந்துள்ள இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்ச டெல்லியில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், ராகுல் காந்தியுடன் சந்திப்பு!!
4 நாள் பயணமாக இந்தியா வந்துள்ள இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்ச டெல்லியில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், ராகுல் காந்தியுடன் சந்திப்பு!!
இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்ச வெள்ளிக்கிழமை மாலை நான்கு நாள் அரசு முறை பயணமாகா புதுடெல்லி வந்தடைந்தார். பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பின் பேரில் பிப்ரவரி 8-11 முதல் அவர் இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார். முக்கிய நாளான சனிக்கிழமை (பிப்ரவரி 8), அங்கு அவர் பிரதமர் மோடியுடன் தூதுக்குழு அளவிலான பேச்சுவார்த்தைகளை நடத்தயுள்ளார்.
இந்த சந்திப்பின்போது இரு நாடுகளுக்கு இடையிலான வர்த்தகம், கடல்சார் பாதுகாப்பு உள்ளிட்டவை குறித்து பேச்சுவார்த்தை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருடன் ஆகியோரையும் ராஜபக்சே சந்தித்துப் பேச உள்ளார். முன்னதாக டெல்லி வந்த ராஜபக்சேவை டெல்லி விமான நிலையத்தில் மனிதவள மேம்பாட்டுத்துறை இணை அமைச்சர் சஞ்சய் தோத்ரே வரவேற்றார்.
அதனைத் தொடர்ந்து முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங், காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி உள்ளிட்டோரை நேற்று சந்தித்து கலந்துரையாடினார். கொழும்பு திரும்புவதற்கு முன்பு வாரணாசி, சாரநாத், போதிகயா , திருப்பதி உள்ளிட்ட புனிதத் தலங்களில் வழிபாடு செய்யவும் ராஜபக்சே திட்டமிட்டுள்ளார்.