திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக துபாய் சென்ற ஸ்ரீதேவி எதிர்பாராத விதமாக மரணமடைந்துள்ளார். முதலில் மாரடைப்புக் காரணமாக ஸ்ரீதேவி உயிரிழந்ததாகச் செய்திகள் வெளியானது. மயங்கிய நிலையில் நீர் நிரம்பிய குளியல் தொட்டியில் அவர் கிடந்தார் என கூறப்பட்டது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஸ்ரீதேவியின் மரணம் குறித்து, அவர் இன்று ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திற்கு பேட்டியளித்தார், அதில் கூறியதாவது, ஆல்கஹால் கலந்த மதுவகைகளை அருந்தும் பழக்கமில்லாத ஸ்ரீதேவியின் உடலில் ஆல்கஹால் வந்தது எப்படி என கேள்வி எழுப்பியுள்ளார்.


ஹோட்டலின் சிசிடிவி பதிவுகளுக்கு என்ன நேரிட்டது எனவும் சுப்பிரமணியன் சுவாமி கேட்டுள்ளார். ஸ்ரீதேவி மாரடைப்பால் மரணமடைந்தார் என திடீரென டாக்டர்கள் சொல்ல வேண்டிய அவசியம் என்ன என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். ஸ்ரீதேவியின் மரணம் குறித்து வெளியாகும் செய்திகளில் நம்பகத்தன்மை இல்லை என சுப்பிரமணியன் சுவாமி கூறியுள்ளார்.


மேலும் பாலிவுட் நடிகைகளுக்கும் தாவூத் இப்ராகிமிற்கும் உள்ள தொடர்புகள் பற்றி விசாரித்தால், உண்மைகள் வெளிவர வாய்ப்பிருக்கிறது எனவும் சுப்பிரமணியன் சுவாமி கூறியுள்ளார்.