ஸ்ரீதேவி இறந்த அன்று என்ன நடந்தது தெரியுமா? -போனி கபூர்!
நடிகை ஸ்ரீதேவி எப்படி இறந்தார் என்பது மர்மமாகவே உள்ளது என இன்னும் பலர் கூறிவரும் நிலையில், அவரது கணவர் போனி கபூர் தற்போது ஸ்ரீதேவியின் கடைசி நிமிடங்கள் ஸ்ரீதேவி இறந்த அன்று என்ன நடந்தது என மனம் திறந்த போனி கபூர்!
தமிழ், ஹிந்தி, கன்னடம், மலையாளம் என பல்வேறு மொழி திரைப்படங்களில் நடித்த பிரபல நடிகை ஸ்ரீ தேவி (54) கடந்த சனிக்கிழமை இரவு 11 மணியளவில் துபாயில் தங்கியிருந்த நட்சத்திர ஓட்டலில் மரணமடைந்தார்.
மும்பை அந்தேரியில் உள்ள செலிப்ரேஷன் விளையாட்டு மன்றத்தில் வைக்கப்பட்டிருந்தது.தற்போது ஸ்ரீதேவி பற்றிய பேச்சு தற்போது தான் ஓய்ந்துள்ளது. அவர் இறப்பில் மர்மம் இருப்பதாக பலரும் சந்தேகம் தெரிவித்துவந்த நிலையில் அவரின் உடல் மூன்று நாட்களுக்கு பிறகு இந்தியா கொண்டுவரப்பட்டு பிப்ரவரி 28-ம் தேதி தகனம் செய்யப்பட்டது.
நடிகை ஸ்ரீதேவியின் அஸ்தியை ராமேஸ்வரத்தில் இன்று கரைக்கப்படவுள்ளது. அதற்காக ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் அஸ்தியை எடுத்துக்கொண்டு தமிழகம் வந்துள்ளார் என தகவல்கள் வெளியானது.
இதை தொடர்ந்து, ஸ்ரீதேவி இறந்த அன்று என்ன நடந்தது என மனம் திறந்த போனி கபூர் கூறியதாவது....!
"3.30 மணிக்கு துபாய் செல்லும் விமானத்தில் சென்றேன். துபாய் நேரப்படி மாலை 6.20 க்கு ஓட்டல் அறைக்கு சென்றேன். என்னிடம் இருந்த டூப்ளிகேட் சாவியை வைத்து கதவை திறந்து ஸ்ரீதேவியின் அறைக்குள் சென்றேன். நான் துபாய் வருவேன் என தெரியும் என ஸ்ரீதேவி என்னிடம் கூறினார்."
"என்னை கட்டி அணைத்து, முத்தமிட்ட ஸ்ரீதேவி, அரைமணிநேரம் பேசிக் கொண்டிருந்தார். ஷாப்பிங் போகலாம் என என்னை அழைத்தார். ஆனால் நான் ரொமான்டிக் டின்னர் சாப்பிட செல்லலாம் என கூறினேன். அதற்கு சம்மதம் தெரிவித்து அவர் ரெடியாவதற்காக மாஸ்டர் பாத்ரூமிற்கு சென்றார். நான் லிவிங் ரூமில் டிவி பார்க்க துவங்கினேன்."
"20 நிமிடம் கழித்து நான் குரல் கொடுத்தேன், "இன்று சனிக்கிழமை, 8 மணிக்கு மேல் ஓட்டலில் கூட்டம் அதிகமாகி விடும்" என்று கத்தினேன். எந்த பதிலும் வரவில்லை, இதுவரை இப்படி நடந்ததில்லை என்பதால் பாத்ரூம் கதவை தட்டினேன் - அதற்கும் பதில் இல்லை."
"கதவு உள்ளே பூட்டப்படாமல் இருந்தது, நான் உள்ளே சென்று பார்க்கும் போது குளியல் தொட்டியில் தண்ணீர் நிரம்பியிருந்தது, ஸ்ரீதேவியின் தலை முதல் கால் வரை தண்ணீரில் மூழ்கியிருந்தது. பயந்துபோன நான் அவரை எழுப்ப முயற்சித்தேன். முடியவில்லை" என போனி கபூர் தெரிவித்துள்ளார்.