சிறைகைதி வாரிசுகளுக்கும் நெற்றியில் கைதி முத்திரை
மத்தியப் பிரதேசம் போபால் சிறையில் சிர்வர்களின் நெற்றியில் முத்திரை குத்திய சம்பவம் ஒன்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மத்தியப் பிரதேசம் போபால் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த தந்தையை காண தங்கள் தாயாருடன் சென்ற சிறுவர்களின் நேற்றில் சிறைச்சாலை அதிகாரிகளால் முத்திரையிடப்பட்டதாக கூறப்படுகிறது. சிறைக் கைதி குழந்தைகளிடமிருந்து வேறுபடுத்த இவ்வாறு நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த சம்பவம்குறித்து இந்தியாவின் சிறைச்சாலை டைரக்டர் ஜெனரலிடம், மத்தியப்பிரதேச மனித உரிமைகள் ஆணையம், அறிக்கை ஒன்றை சமர்பிக்குமாறு கூறியுள்ளது.
இதுகுறித்து மத்தியப் பிரதேச சிறைத்துறை அமைச்சர் குசும் மெஹ்டெல்லே கூறுகையில் "இந்த விஷயத்தை விசாரித்து, அந்த அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுப்போம்", என தெரிவித்துள்ளார்