உலக அளவில் மண் வளத்தை பாதுகாப்பதற்காக ஈஷா நிறுவனர் சத்குரு தொடங்கி உள்ள மண் காப்போம் இயக்கத்திற்கு எஸ்செல் குழுமத் தலைவர் டாக்டர் சுபாஷ் சந்திரா ஆதரவுக் கரம் நீட்டியிருக்கிறார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மண்ணைக் காப்பாற்றுங்கள் (Save Soil) என்ற இயக்கம், மண் மற்றும் பூமியின் மீதான ஆக்கப்பூர்வமான அணுகுமுறையைத் தூண்டுவதற்கான உலகளாவிய இயக்கம்.


உலகெங்கிலும் உள்ள அரசாங்கங்கள், அவர்களின் குடிமக்கள் சூழலியல் மற்றும் மண்ணுக்கு புத்துயிர் அளிக்கும் கொள்கைகளை விரும்புகிறார்கள் என்பதைக் காட்டுவதே இயக்கத்தின் முக்கிய நோக்கங்களில் ஒன்றாகும்.


மேலும் படிக்க | ஈஷா அறக்கட்டளையின் 'மண் காப்போம்' இயக்கத்துடன் இணைந்த 6 கரீபியன் நாடுகள் 


பூமியை தாய் என்று சொல்வது நமது பாரம்பரியம், நமது தாய் மீதான அத்துமீறல்களை கைவிட வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ள டாக்டர் சுபாஷ் சந்திரா, மண்ணை, மணலாய் மாற்றும் செயல்களை தவிர்த்து, பூமியை காப்போம் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.


 



 


இன்று ஜீ குழுமத்தின் தலைவர் டாகடர் சுபாஷ் சந்திரா விடுத்துள்ள சமூக ஊடக செய்தியில், பூமியின் உற்பத்தி சக்தி குறைந்து வருகிறது என்றும், அதற்குக் காரணம் நாம் தான் என்றும் சுட்டிக் காட்டினார்.


மேலும், மெதுவாக மலட்டுத் தன்மையை நோக்கிச் செல்லும் பூமித்தாயை மீட்டெடுப்பதும், சிகிச்சையளிப்பதும் அவசியம், அது நமது கடமை என்று சொன்னார். ஏனென்றால், பூமியின் வளமையும், செழுமையும் தான் உலகில் உள்ள உயிர்களின் வாழ்வுக்கு ஆதாரம் ஆகும்.



விவசாயத் தொழில்நுட்பம், காலநிலை மாறுதல் என பல்வேறு காரணிகளால், மண்ணின் விளைச்சல் தன்மை மாறிவிட்டது. தற்போது பூமியின் உற்பத்தி குறைந்து போய்விட்டது என்றும் டாக்டர் சந்திரா கவலை தெரிவிக்கிறார்.



அரை மில்லியன் மக்களுக்கு தேவையான உணவை தான் உற்பத்தி செய்ய முடியும் என்றால், நமது பூமியின் மக்கள் தொகை அனைத்திற்கும் ஆன உணவுக்கு எங்கே செல்வது என்று கேள்வி எழுப்புகிறார் ஜீ குழுமத் தலைவர்.


மண்ணைக் காப்பது, சுற்றுச்சூழலை காப்பது தொடர்பாக மக்கள், தங்கள் ஆட்சியாளர்களிடம் பேச வேண்டும், பேசுவதோடு மட்டுமல்லாமல், கூக்குரல் எழுப்பவேண்டும்.


பூமியை காக்கும் கூக்குரலை நாம் இப்போது எழுப்பாவிட்டால், பிறகு உணவு இல்லை என்ற பசிப்பிணிக்கான குரல் ஒருபோதும் ஓயாது என்று தனது கவலையை டாக்டர் சுபாஷ் சந்திரா பதிவு செய்துள்ளார்.


மேலும் படிக்க | மூன்றாண்டுகளில் ஜீ டிஜிட்டலில் 1 பில்லியன் பயனர்கள்! டாக்டர் சுபாஷ் சந்திராவின் கனவு!


உணவு உற்பத்தி குறைந்தால், பணம் உள்ளவர்கள் அதை வாங்கி விட்டால், சாமானிய மக்களின் பசிக்கு என்ன செய்வது என்று கேள்வி எழுப்பும் ஜீ குழுமத் தலைவர், நம்மை ஆள்பவர்களிடம், ஆட்சியாளர்களிடம் பேசி, உரக்கச் சொல்லி, மண் மற்றும் விவசாயத்தை கவனித்து மண்ணைக் காப்பாற்றுங்கள் என்று கேட்டுக் கொண்டார்.


இவ்வளவு சிக்கல்களையும் தீர்க்கும் முன்னெடுப்பை மண்ணைக் காப்போம் என்ற இயக்கத்தின் மூலமாக சத்குரு ஜக்கி வாசுதேவ் தொடங்குகியுள்ளார், அவருக்கும், மண்ணைக் காப்பாற்றுங்கள் (Save Soil) இயக்கத்திற்கும் அனைவரும் ஆதரவு கொடுக்க வேண்டும் என்று டாக்டர் சுபாஷ் சந்திரா வேண்டுகோள் விடுத்தார்.


மண்ணை காப்போம் (Save Soil) என்ற இயக்கத்திற்கு 3.5 பில்லியனுக்கும் அதிகமான மக்களின் ஆதரவை நிரூபிக்க, சத்குரு தனி மோட்டார் சைக்கிளில் 24 நாடுகளில் 30,000 கி.மீ.க்கு மேல் பயணம் செய்கிறார்.



இந்தப் பயணம் லண்டனில் தொடங்கி, தென்னிந்தியாவில் காவிரிப் படுகையில் முடிவடையும், அங்கு சத்குருவால் தொடங்கப்பட்ட காவிரி அழைப்புத் திட்டம், இதுவரை 125,000 விவசாயிகள் 62 மில்லியன் மரங்களை நட்டு மண்ணைப் புத்துயிர் பெறச் செய்து, காவிரி ஆற்றின் வடிந்து வரும் நீரை நிரப்ப உதவியுள்ளது.


குடிமக்கள் அதிக எண்ணிக்கையில் பங்கேற்கும் போது, ​​அது சுற்றுச்சூழலியல் பிரச்சினைகள் தேர்தல் பிரச்சினைகளாக மாற வழிவகுக்கும், இது அரசாங்கங்கள் கொள்கைகளை ஏற்றுக்கொள்வதையும் சுற்றுச்சூழல் தீர்வுகளை தொடர்ந்து செயல்படுத்துவதற்கான வரவு செலவுத் திட்டங்களையும் உறுதி செய்யும் என்பதன் அடிப்படையில் ஈஷா அமைப்பின் சார்பாக சத்குரு ஜக்கி வாசுதேவ் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுள்ளார். 


இந்த பூமியைக் காக்கும் முயற்சிக்கு, இந்தியாவின் நம்பர் ஒன் செய்திச் சேனலான ஜீ குழுமத்தின் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான டாக்டர் சுபாஷ் சநதிரா மனபூர்வமான ஆதரவை நல்கியுள்ளார்.


மேலும் படிக்க: ஈஷா விவகாரத்தில் தமிழக அரசு தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டதா? எஸ்.டி.பி.ஐ கேள்வி 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR