இந்தியாவின் முதன்மை வங்கிகளுல் ஒன்றான SBI, கடன்களுக்கான வட்டி விகிதத்தை 0.1% குறைப்பதாக அறிவித்துள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்தியாவின் மிகப் பெரிய கடன் வழங்குநரான ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (SBI) அனைத்து குத்தகைதாரர்களிடமிருந்தும் தனது வீட்டுக் கடன் வட்டி விகிதங்களைக் குறைப்பதாக அறிவித்துள்ளது. இந்த வட்டி குறைப்பானது நாளை முதல் அமலுக்கு வரும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.


இதுதொடர்பாக பாரத ஸ்டேட் வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பில், டெபாசிட்டுகளுக்கு அளிக்கும் வட்டிவிகித அடிப்படையிலான கடன் வட்டி விகிதத்தை SBI 0.1% குறைப்பதாக அறிவித்துள்ளது. மேலும் தற்போது 8.25% உள்ள கடன் வட்டி விகிதம் 8.15% குறைக்கப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளது.


இது 2019-20 நிதியாண்டில் MCLR-ல் தொடர்ச்சியாக ஐந்தாவது வட்டி குறைப்பு ஆகும்.


வீழ்ச்சியடைந்த வட்டி வீத சூழ்நிலை மற்றும் உபரி பணப்புழக்கத்தைக் கருத்தில் கொண்டு, SBI செப்டம்பர் 10 முதல் நடைமுறைக்கு வரும் கால டெபாசிட்டுகள் (டிடி) மீதான வட்டி விகிதத்தையும் மாற்றியுள்ளது. வங்கி சில்லறை டிடி விகிதங்களை 20-25 bps மற்றும் மொத்த டிடி விகிதங்களை 10-20 bps-ஆக குறைத்துள்ளது.


முன்னதாக கடந்த ஆகஸ்ட் மாதம், SBI வங்கி தனது MCLR-ல் 15 அடிப்படை புள்ளிகளைக் குறைப்பதாக அறிவித்தது. திருத்தப்பட்ட விகிதங்கள் ஆகஸ்ட் 10 முதல் அமலுக்கு வந்தது. இதன் மூலம் ஒரு வருடம் MCLR ஆண்டுக்கு 8.40 சதவீதத்திலிருந்து 8.25 சதவீதமாகக் குறையும் என்றும் வங்கி தெரிவித்தது.


இந்நிலையில் தற்போது, ரிசர்வ் வங்கி (RBI) தனது மூன்றாவது இரு மாத நாணயக் கொள்கையில் முக்கிய கடன் விகிதங்களை குறைத்த சில மணி நேரங்களில் SBI-ன் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.