Kerala: ஆகஸ்ட்-செப்டம்பரில் ஒரு நாளைக்கு 10,000 முதல் 20,000 பேருக்கு பாதிப்பு ஏற்படலாம்
ஆகஸ்ட்-செப்டம்பரில் ஒரு நாளைக்கு 10,000 முதல் 20,000 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது என கேரளா சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார்.
கேரளா: ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் கேரளாவில் COVID-19 தொற்று பாதிப்பு கடுமையாக இருக்கும், அதன் பாதிப்பு உயரும் என்று தெரிகிறது, தினசரி தொற்றுநோய்கள் 10,000 முதல் 20,000 வரை செல்லும் என்று எதிர் பார்க்கப்படுகிறது என மாநில சுகாதார அமைச்சர் கே.கே. ஷைலஜா (Health Minister K.K. Shailaja) கூறினார்.
"ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில், COVID-19 பாதிப்பு அதிகரித்து வருவதாக மருத்துவ வல்லுநர்கள் கருதுகின்றனர். ஒரு நாளைக்கு 10,000 முதல் 20,000 பேருக்கு ஏற்பட வாய்ப்புள்ளது என நாங்கள் கருதுகிறோம் என்று அவர் ஒரு வீடியோ மூலம் நடைபெற்ற கூட்டத்தில் கூறினார். இந்தமுறை அதிக அளவில் இளைஞர்களையும் பாதிக்கும் எனவும் கூறிய அவர், தொற்று பரவலைத் தடுக்க அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.
கொரோனா தொற்று (COVID-19 Cases) அதிக அளவில் அதிகரித்தால் இறப்பு விகித வரைபடம் உயரத் தொடங்கும் என்று குறிப்பிட்டுள்ள அமைச்சர், அதை தடுத்டு நிறுத்த வேண்டும் என்றார்.
ALSO READ | திருவனந்தபுரத்தில் சமூக பரவல் தொடங்கியது… கேரள முதல்வரின் அதிர்ச்சி தகவல்..!!!
"நோய்த்தொற்று எண்ணிக்கை அதிகரிப்பதன் மூலம் இறப்பு எண்ணிக்கை அதிகரிக்கும் என்பதையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும். எனவே, நோய் பரவாமல் இருக்க நாம் ஒரு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்கு மக்கள் ஒத்துழைக்க வேண்டும் என்றார்.
COVID-19 வைரஸ் பரவாமல் இருக்க முகமூடிகள் அணிவது, கை கழுவுதல் மற்றும் சமூக விலகல் போன்ற சுகாதார நெறிமுறையை அனைவரும் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என்று ஷைலாஜா கூறினார்.
ALSO READ | கேரளாவின் இடுக்கியில் நிலச்சரிவு: 5 பேர் பலி, பல தேயிலைத் தொழிலாளர்கள் சிக்கியுள்ளனர்!!
இந்தியாவின் முதல் COVID-19 தொற்று ஜனவரி 30 ஆம் தேதி கேரளா மாநிலத்தில் கண்டறியப்பட்டது. ஒரு பெண் மருத்துவ மாணவி சீனாவின் வுஹானில் (Wuhan in China) இருந்து மாநிலத்திற்கு திரும்பியபோது அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. வுஹான்கொரோனா வைரஸின் மையப்பகுதியாகும்.