கேரளாவில் கொரோனா வைரஸ்: திருவனந்தபுரத்தில் சமூக அளவில் தொற்று பரவல் தொடங்கியது என, முதல்வர் பினராயி விஜயன் ஒப்புக்கொள்கிறார். செய்தியாளர்களிடம் பேசிய கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன், பூந்துரா, புல்லுவிலா போன்ற பகுதிகளில் சமூக அளவில் பரவல் நிச்சயம் ஏற்படலாம் என கூறுகிறார்.
கேரளாவில் கொரோனா வைரஸ்: திருவனந்தபுரத்தில் சமூக அளவில் தொற்று பரவல் தொடங்கியது என்பதை முதல்வர் பினராயி விஜயன் ஒப்புக்கொள்கிறார்.
ALSO READ | வீடு தேடி வரும் மருத்துவமனை…. கொரோனாவிற்கு ஆப்பு வைக்கும் IIT …!!!
புதுடெல்லி: மாநில தலைநகர் திருவனந்தபுரத்தின் சில பகுதிகளில் கொரோனா வைரஸின் சமூக பரவல் தொடங்கியுள்ளதாக கேரள முதல்வர் பினராயி விஜயன் வெள்ளிக்கிழமை ஒப்புக் கொண்டார்.
இன்று மாநிலத்தில் 791 பேருக்கு புதிதாக தொற்று ஏற்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது என்றும் இந்த தொற்றினால் ஒருவர் இறந்து விட்டார் என்றும் தெரிவித்தார். அதே நேரத்தில், 133 பேர் குணமடைந்துள்ளனர்.
791 new #COVID19 positive cases, 133 recoveries and one death have been reported in Kerala today: Kerala CM Pinarayi Vijayan. pic.twitter.com/HR1XgwXnJn
— ANI (@ANI) July 17, 2020
திருவனந்தபுரம் தொடர்ந்து COVID-19 தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. இன்று மட்டும் 300 க்கும் மேற்பட்ட தொற்று பாதிப்புகள் பதிவாகியுள்ளன, அதைத் தொடர்ந்து எர்ணாகுளம் மாவட்டத்திலும், கொல்லம் மற்றும் மலப்புரம் ஆகிய பகுதிகளிலும் தொற்று அதிக அளவில் உள்ளது.
இதுவரை, 2,68,128 பேருக்கு பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது.
இந்தியாவில், கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக 34,956 கோவிட் -19 தொற்று ஏற்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில், 687 பேர் இறந்து விட்டனர். கொரோனா தொற்றூ ஏற்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 10,03,832 ஆக உள்ளது. 25,602 பேர் இறந்துள்ளனர்.
ALSO READ | வீடியோவில் விசிட் ..வாட்ஸ் அப்பில் டீல்…. கைக்கு வந்தது தீவு…!!!
மகாராஷ்டிரா மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ள மாநிலமாக உள்ளது, அங்கு 2,84,281 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. 11,194 பேர் உயிரிழந்தனர். அதற்கு அடுத்தப்படியாக தமிழகத்தில் மொத்தம் 1,56,369 வழக்குகள்பேருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது, 2,236 பேர் இறந்துள்ளனர்.