புதுடெல்லி: மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிடம் 1.60 கோடிக்கும் அதிகமான கோவிட் -19 தடுப்பூசிகள் இன்னும் உள்ளன என கூறியுள்ள மத்திய சுகாதார அமைச்சகம், அடுத்த மூன்று நாட்களில் அவர்களுக்கு 2.67 லட்சத்திற்கும் அதிகமான தடுப்பூசிகள் வழங்கப்படும் என்று கூறியுள்ளது. மத்திய சுகாதார அமைச்சகம் சனிக்கிழமை (2021 மே,22) வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு  21 கோடிக்கும் அதிகமான தடுப்பூசி மருந்துகள் வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.


"இதில், 2021 மே 21 வரை, இன்று காலை 8 மணிக்கு கிடைத்துள்ள தரவுகளின்படி கணக்கிடப்பட்ட மொத்த தடுப்பூசி பயன்பாடு, 19,73,61,311 டோஸ்கள். இதில் வீணாக்கப்பட்ட தடுப்பூசி டோஸ்களும் அடங்கும்" என்று சுகாதார அமைச்சகம் கூறியுள்ளது.


"1.60 கோடிக்கும் அதிகமான COVID தடுப்பூசி அளவுகள் (1,60,13,409) இன்னும் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிடம் உள்ளன" என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


2,67,110 தடுப்பூசிகள் அடுத்த மூன்று நாட்களுக்குள் மாநிலங்கள்  யூனியன் பிரதேசங்களுக்கு வழங்கப்படும் என்றும் சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவல் தெரிவிக்கிறது.


ALSO READ | COVID-19: கருப்பு பூஞ்சையை அடுத்து பீதியை கிளப்பும் வெள்ளை பூஞ்சை


இதற்கிடையில், நேற்று ( 2021, மே 21) மட்டும் நாட்டில் மொத்தம் 2,57,299  பேருக்கு கோவிட் -19 ஏற்பட்டுள்ளது.தொடர்ந்து ஆறாவது நாளாக 3 லட்சத்திற்கும் குறைவான பாதிப்பை இந்தியா பதிவு செய்துள்ளது.


நேற்று இந்தியாவில் சுமார் 2.67 லட்சம் வழக்குகள் பதிவாகின. கோவிட் நோய் பாதிப்பு குறைந்து வருவதை போல் இறப்பு எண்ணிக்கையும் சற்று குறைந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 4,194 பேர் இறந்துள்ளனர்.


இந்நிலையில், தடுப்பூசி போடும் நடவடிக்கையை தீவிரப்படுத்த வேண்டியதன் அவசியத்தை மத்திய சுகாதார துறை அமைச்சர் ஹர்ஷ் வர்த்தன் வலியுறுத்தினார்.  மேலும் மத்திய அரசு வவங்கும் 70% தடுப்பூசிகளை இரண்டாவது டோஸ் தடுப்பூசிக்காக வேண்டியதன் அவசியத்தை மீண்டும் வலியுறுத்தினார். தடுப்பூசி வீணாகாமல் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.


ALSO READ | சமூக ஊடகங்களில் ‘இந்திய திரிபு’ என குறிப்பிடும் பதிவுகளை நீக்க வேண்டும்: மத்திய அரசு


தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR