இந்தியாவில் Sputnik V தடுப்பூசி உற்பத்தி எப்போது தொடங்கும்; வெளியானது முக்கிய தகவல்

கொரோனா வைரஸின் இரண்டாவது அலைகளுடன் இந்தியா போராடி வரும் நிலையில், மத்திய மாநில அரசுகள் இணைந்து நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றன. 

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : May 22, 2021, 11:17 AM IST
  • உலகில் தயாரிக்கப்படும் ஸ்பூட்னிக் வி தடுப்பூசிகளில், 65 முதல் 70 சதவீதம் தடுப்பூசி, இந்தியாவில் தயாரிக்கப்படும்
  • ஜூன் மாதத்திற்குள் 50 மில்லியன் டோஸ் (ஜூன் மாதத்திற்குள் இந்தியாவுக்கு 50 லட்சம் டோஸ் கிடைக்கும்.
  • ரஷ்ய நேரடி முதலீட்டு நிதி (RDIF), ரஷ்யாவின் சுகாதார நிதியம், ஆகியவை தடுப்பூசிக்கு நிதியளிக்கிறது.
இந்தியாவில் Sputnik V தடுப்பூசி உற்பத்தி எப்போது தொடங்கும்; வெளியானது முக்கிய தகவல் title=

கொரோனா வைரஸின் இரண்டாவது அலைகளுடன் இந்தியா போராடி வரும் நிலையில், மத்திய மாநில அரசுகள் இணைந்து நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றன. கொரோனா வைரஸை கட்டுப்படுத்த சீராம் நிறுவனம் தயாரிக்கும் கோவிஷீல்ட் மற்றும்  பாரத்பயோடெக் நிறுவனம் தயாரிக்கும் கோவேக்ஸின் ஆகியவற்றின் பயன்பாட்டிற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு, இதுவரை நாட்டில் 19.3 கோடிக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது

தேசிய தடுப்பூசி திட்டத்தின் கீழ், கோவிஷீல்ட், கோவேக்ஸின் பயன்படுத்தப்பட்டு வரும் நிலையில், ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி மூன்றாவது தடுப்பூசியாக உள்ளது.

கொரோனாவுக்கு எதிராக போரில் இந்தியாவிற்கு வலுசேர்க்கும் விதமாக. இந்தியாவில் ஸ்பட்னிக் வி தயாரிப்பு இந்த ஆண்டு ஆகஸ்ட் முதல்  தொடங்கும் என ரஷ்யாவிற்கான இந்திய தூதர் டி.பி.வெங்கடேஷ் வர்மா கூறியுள்ளார். செப்டம்பர்-அக்டோபர் மாதத்திற்குள் இந்தியாவில் 85 கோடி டோஸ் ஸ்பூட்னிக் வி உற்பத்தி செய்யப்படும் என்று அவர் கூறினார்.

உலகில் தயாரிக்கப்படும் ஸ்பூட்னிக் வி தடுப்பூசிகளில், 65 முதல் 70 சதவீதம்  தடுப்பூசி, இந்தியாவில் தயாரிக்கப்படும் என்று அவர் கூறினார். இந்தியாவின் தேவைகள் பூர்த்தி செய்யப்பட்ட பின்னர், ரஷ்யா அதை மற்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் என்றும் அவர் கூறினார்.

ALSO READ | ரஷ்யாவின் Sputnik V தடுப்பூசி AK47 போல நம்பகமானது: விளாடிமிர் புடின்

ஜூன் மாதத்திற்குள் 50 மில்லியன் டோஸ் (ஜூன் மாதத்திற்குள் இந்தியாவுக்கு 50 லட்சம் டோஸ் கிடைக்கும்

ரஷ்ய நேரடி முதலீட்டு நிதி (RDIF), ரஷ்யாவின் சுகாதார நிதியம், ஆகியவை இந்த தடுப்பூசிக்கு நிதியளிக்கிறது. ஸ்புட்னிக் வி உற்பத்திக்காக இந்தியாவின் 5 ஐந்து நிறுவனங்களுடன், ரஷ்யா ஒப்பந்தம் செய்துள்ளது. இந்தியாவிற்கு இதுவரை 2,10,000 டோஸ் ஸ்பூட்னிக் வி கிடைத்துள்ளது. மே மாத இறுதியில், 30 லட்சம் டோஸ்கள் கிடைக்கும். இந்த எண்ணிக்கை ஜூன் மாதத்திற்குள் 50 லட்சம் அளவுகளாக அதிகரிக்கும். ஒரு டோஸ் தடுப்பூசியான ஸ்பூட்னிக் லைட் (Spurnik Lite) விரைவில் இந்தியாவில் கிடைக்கும் என்றும் ரஷ்யா அறிவித்துள்ளது.

ALSO READ | Sputnik V: 2022 மார்ச் மாதத்திற்குள் 36 கோடி இந்தியர்களுக்கு ரஷ்ய தடுப்பூசி

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR 

Trending News