இன்று கொல்கத்தாவில் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அவர்கள், மேற்கு வங்கம் மாநில முதவர் மம்தா பானர்ஜியை சந்தித்து பேசினார். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அவர்கள், இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ள ரோஹிங்யா மக்களை பயோமெட்ரிக் முறையில் அடையாளம் காண வேண்டும் என அனைத்து மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த அடையாளம் நடவடிக்கை மேற்கொண்ட பிறகு, அதன் அறிக்கையை மாநில அரசுகள் மத்திய அரசுக்கு அனுப்பி வைக்க வேண்டும். இதன்பின்னர் மியான்மார் அரசாங்கத்துடன் மத்திய அரசு பேச்சுவாரத்தை நடத்தும் எனக் கூறினார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு தான் ரோஹிங்ய மக்களை குறித்து ஆலோசனை வழங்கியது அரசு. அதில் சட்டவிரோத அகதிகள் இந்தியாவின் மற்ற பகுதிகளுக்கு ரயில் பயணம் செய்து செல்கின்றனர். தற்போது திருவிழா பருவம் என்பதால், பெரும் கூட்டத்தை பயன்படுத்தி, இந்த மக்கள் நாட்டின் மற்ற பகுதிகளில், குறிப்பாக தென் இந்தியாவை நோக்கி பயணிக்கக் கூடும் என மத்திய அரசு தெரிவித்தது. 


இரண்டு நாட்களுக்கு முன்னர், கேரள மாநிலத்திற்கு ரோகிங்கா அகதிகள் குடும்ப குடும்பமாக செல்கின்றனர் என்று ரயில்வே பாதுகாப்பு படை எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக பாதுகாப்பு கமிஷன்களுக்கு இரகசிய கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. கடிதத்தை அடுத்து, கேரள போலீசார் எச்சரிக்கையுடன் செயல்படுகின்றனர். வட மாநிலத்தில் இருந்து வரும் ரயில்களில் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர்.


ஏற்கனவே நமது நாட்டில் ரோஹிங்கியா மக்கள் சட்ட விரோதமாக தங்கியுள்ளனர். அதுமட்டுமில்லாமல் அவர்கள் சட்ட விரோத செயல்களில் ஈடுபடுகின்றனர். இந்தியாவில் சுமார் 40,000 ரோஹிங்கியா மக்கள் தங்கியுள்ளனர். அவர்களை குறித்து தகவல்களை சேகரித்து அனுப்புமாறு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது என்பது குறிப்பிடதக்கது.