நிர்பயா கொலை வழக்கு: குற்றவாளிகளின் கருணை மனு நிராகரிப்பு..!
டெல்லியில் மருத்துவ கல்லூரி மாணவி நிர்பயா வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட வழக்கில் தூக்கு தண்டனை பெற்ற குற்றவாளிகளின் கருணை மனு நிராகரிப்பு!!
டெல்லியில் மருத்துவ கல்லூரி மாணவி நிர்பயா வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட வழக்கில் தூக்கு தண்டனை பெற்ற குற்றவாளிகளின் கருணை மனு நிராகரிப்பு!!
தலைநகர் டெல்லியில், மருத்துவ கல்லூரி மாணவி ஒருவர் ஒரு கும்பலால் வன்புணர்வு செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்டார். கடந்த 2012 ஆம் ஆண்டு, டிசம்பர் 16 ஆம் தேதி நள்ளிரவில், ஓடும் பேருந்தில் நிகழ்ந்த இக்கொடூர சம்பவம், உலகையே உலுக்கியது. ஓடும் பேருந்திலிருந்து டெல்லி சாலையில் தூக்கி வீசப்பட்ட அவர், உயிருக்குப் போராடிவந்த நிலையில் மருத்துவ சிகிச்சைகள் பலன் அளிக்காமல் இறந்தார். நிர்பயா மரணத்தின் அதிர்வலைகள் நாடெங்கிலும் இன்றளவும் தொடர்ந்து கொண்டிருக்கிறது.
நிர்பயா மரணத்தை அடுத்து பாலியல் வன்கொடுமை குற்றங்கள் தொடர்பான பல சட்டத்திருத்தங்களை மத்திய அரசு கொண்டுவந்தது. குற்றம் தொடர்பாகக் கைது செய்யப்பட்ட ஆறுபேரில் ராம் சிங் திகார் சிறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். குற்றத்தில் ஈடுபட்ட மற்றொருவர் 18 வயதுக்குக் குறைவானவர்கள் என்பதால் அவருக்குச் சிறார் குற்றவியல் சட்டத்தின் கீழ் மூன்றாண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. மீதமுள்ள நான்கு பேருக்குத் தூக்குத்தண்டனை விதித்து விரைவு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
அதில் ஒருவன் சிறார் என்பதால் தண்டனை முடிந்து விடுதலை செய்யப்பட்ட நிலையில் முக்கிய குற்றாவாளியான ராம்சிங் சிறையில் தற்கொலை செய்து கொண்டான். அதன்பிறகு குற்றவாளிகளான பவன்குப்தா, முகேஷ்சிங், தனேஷ் சர்மா, அக்ஷய்தாகூர் ஆகியோருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது.
இந்நிலையில், மரணதண்டனை நிறைவேற்றப்படுவதற்கு முன்பாகக் குற்றவாளிகள் கருணை மனு தாக்கல் செய்வதற்கான காலக்கெடு கொடுக்கப்பட்டிருக்கும் நிலையில், மூன்று குற்றவாளிகள் தரப்பும் கருணை மனு தாக்கல் செய்யாமல் இருக்கின்றனர். இதையடுத்து, கருணை மனு தாக்கல் செய்ய கடந்த அக்டோபர் 29-ல் ஒருவார கால அவகாசம் கொடுத்தது உச்சநீதிமன்றம்.
அதற்கான கால அவகாசம் தற்போது முடிவடைய இருக்கும் நிலையில், திருத்த மனு அளிக்க முடிவு செய்துள்ளது மூன்று குற்றவாளிகள் தரப்பு. இந்நிலையில், தங்களின் தூக்குத் தண்டனையைக் குறைக்கும்படி 4 பேரும் குடியரசுத் தலைவருக்குக் கருணை மனுவை அனுப்பி வைத்தனர். அவர்களின் கருணை மனு குறித்து டெல்லி துணைநிலை ஆளுநரின் பரிந்துரைக்குப் பின் உள்துறை அமைச்சகம் முடிவெடுக்கும் என்று தெரிகிறது. இதுதொடர்பாக டெல்லி மாநில அரசு சார்பில் உள்துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயின், துணைநிலை ஆளுநர் அனில் பைஜானுக்குக் கடிதம் எழுதியிருக்கிறார். அந்தக் கடிதத்தில், இதுபோன்ற கொடுங்குற்றத்தை இழைத்தவர்களுக்கு மரண தண்டனை நிறைவேற்ற வேண்டும். அவர்களின் கருணை மனுவை நிராகரிக்க வேண்டும் என்று மாநில அரசு சார்பில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
இதை தொடர்ந்து, டெல்லி ஜந்தர் மந்தரில், அனைத்திந்திய ஜனநாயக மகளிர் அமைப்பு சார்பில், ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்தின்போது, பெண்களுக்கு எதிரான நடைபெறும் குற்றங்களை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர். பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் உரிய நீதி கிடைக்கவேண்டும் என வலியுறுத்தினர். இதேபோன்று, அனைத்திந்திய மாணவர் அமைப்பினர் ஏராளமானோர் பங்கேற்று பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.