ராஜஸ்தானில் குஜ்ஜார் சமூகத்தினர், தங்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் இடஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி கடந்த 2007-ஆம் ஆண்டு முதல் போராட்டம் நடத்தி வருகின்றனர். சாலை மறியல் மற்றும் ரெயில் மறியல் போன்ற போராட்டங்களில் தீவிரமாக ஈடுப்பட்டு வருகின்றனர். குஜ்ஜார் சமூகத்தினருக்கு 5% இடஒதுக்கீடு வழங்கப்படும் என கடந்த 2017-ஆம் ஆண்டில் அப்போதைய மாநில அரசு(பாஜக) வாக்குறுதி அளித்தது. இதற்காக சட்டசபையில் மசோதா தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், அதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் மசோதாவை நிறுத்திவைத்தது. இதனால் இடஒதுக்கீடு விவகாரம் தொடர்ந்து இழுபறியாகவே உள்ளது. இந்தநிலையில் சமீபத்தில் நடைபெற்ற ராஜஸ்தான் சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. ஆட்சி அமைத்து இரண்டே மாதங்கள் ஆனா நிலையில், மீண்டும் குஜ்ஜார் சமூகத்தினர் இடஒதுக்கீடு விசியத்தை கையில் எடுத்துள்ளனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கடந்த பிப்ரவரி 8 ஆம் நாள் முதல் குஜ்ஜார் சமூக மக்கள், தங்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பில் உரிய இடஒதுக்கீடு அளிக்க வேண்டும் என ராஜஸ்தானில் ஐந்தாவது நாளாக இன்றும் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். ரயில்கள் செல்லும் தண்டவாளத்தின் மீது தற்காலிக கூடாரங்களை அமைத்து இரவு, பகலாக அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன்காரணமாக அப்பகுதி வழி செல்லும் பல ரயில்கள் ரத்து செய்யப்பட்டன. சில ரயில்கள் மாற்று வழியில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது. 


இந்த நிலையில் குஜ்ஜார் சமூக மக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால், இந்தியன் ரயில்வே வரும் 15 ஆம் தேதி வரை ரத்து மற்றும் மாற்று பாதையில் செல்லும் ரயில்களின் எண்ணிக்கை குறித்து அறிவித்துள்ளது. அதில், 


பிப்ரவரி 12: 


மேற்கு ரயில்வேயின் 26 ரயில்கள் ரத்து செய்யப்பட்டன மற்றும் 12 மாற்று பாதைக்கு மாற்றப்பட்டன. 


13 பிப்ரவரி: 


31 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன மற்றும் 10 மாற்று பாதைக்கு மாற்றப்பட்டுள்ளன.


14 பிப்ரவரி: 


11 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மற்றும் 4 மாற்று பாதைக்கு மாற்றப்பட்டுள்ளன


15 பிப்ரவரி: 


2 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.


ஏற்கனவே நேற்று ராஜஸ்தான் மாநில முதல்வர் அசோக் கெலட், குஜ்ஜார் சமூக மக்களின் கோரிக்கைகளை அரசு பரிசீலனை செய்யும் என தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.