கடந்த சில நாட்களாகவே மும்பை பங்கு சந்தை ஏற்றத்துடன் இருந்துவரும் நிலையில், நடப்பு வாரத்தின் முதல் வர்த்தக நாளான இன்று, தேசிய பங்கு சந்தை நிஃப்டி, 18,000 புள்ளிகளை கடந்து சாதனை படைத்துள்ளது. தற்போது 18,018 என்ற அளவில் வர்த்தகக் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 
மாருதி சுசூகி, பவர் கிரிட் கார்பரேஷன் ஆஃப் இந்தியா, கோடெக் மஹிந்திரா வங்கி, மஹிந்திரா & மஹிந்திரா, ரிலயன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் ஆகியவற்றின் பங்கு மதிப்புகள் உயர்ந்தன. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

எனினும் டாடா கன்சண்டன்ஸி சர்வீஸஸ், டெக் மஹிந்திரா, ஹெச்சிஎல் டெக்னாலஜீஸ், பாரதி ஏர்டெல் ஆகியவற்றில் பங்குகள் மதிப்பு சற்றி குறைந்தது. 


ALSO READ | SBI offer: ரூ. 2 லட்சம் இலவச காப்பீடு; யாருக்கெல்லாம் கிடைக்கும்..!!


பல்வேறு சர்வதேச காரணிகளுக்கு மத்தியில், இந்திய பங்கு சந்தைகள் கடந்த சில நாட்களாகவே சற்று ஏற்றத்தில் காணப்படுகின்றன. 


மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண்ணும் 60,000 புள்ளிகளை கடந்து முன்னதாக சாதனை படைத்தது.  சென்செக்ஸ் தற்போது 60,300 என்ற அளவில் வர்த்தகம் நடைபெற்று வருகிறது.


ALSO READ: SBI Cards சூப்பர் செய்தி: பண்டிகை கால cashback offer!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR