பசுமை நிறைந்த கேரளாவில் கடந்த ஆண்டு பருவமழை பொய்த்ததால் கடுமையான பாதிப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் கேரளாவில் மீண்டும் மழை பெய்யத் தொடங்கி உள்ளது. மாநில தலைநகரான திருவனந்தபுரம் மற்றும் இடுக்கி, காசர்கோடு, எர்ணாகுளம், பாலக்காடு, விதுரா ஆகிய பகுதிகளில் விடிய, விடிய மழை கொட்டித் தீர்த்தது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதைத்  தொடர்ந்து, கேரளாவில் தென்மேற்கு பருவமழை மீண்டும் தீவிரமடைந்து உள்ளது. நேற்று மாநிலம் முழுவதும் கனமழை பெய்தது. மாநில தலைநகரான திருவனந்தபுரம் மற்றும் பாலக்காடு, திருச்சூர், ஆலுவா, எர்ணாகுளம், கோட்டயம், செங்கணூர், கொல்லம் ஆகிய மாவட்டங்களில் மழை கொட்டித் தீர்த்தது.


தற்போது இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்;- தென்மேற்கு பருவ மழையானது திருவனந்தபுரத்தின் மேற்கு திசையில் 230 கி.மீ., தொலைவில் மையம் கொண்டுள்ளதாக வெளியான தகவலின் படி கடந்த வியாழன் அன்று திருவனந்தபுரத்தை ஒகி புயல் வந்தடைந்தது. அதன் பின் தொடர்ந்து மழை பெய்தது.



இன்று காலை மழை சற்று கடுமையாக இருந்து வந்ததால் மழைக்குப் பின் தண்ணீர் தேக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் வறட்சி நீங்கி நீர்நிலைககளில் நீர் மட்டம் உயர்ந்தது. எனவே, போக்குவரத்துக்கு கடுமையாக பாதிக்கப்பட்டு மக்கள் அவதியுற்று வருகின்றனர்.