டெல்லி, ஸ்ரீநகர், சண்டிகர், மதுரா உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் நில அதிர்வு உணரப்பட்டது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

டெல்லி மற்றும் NCR பிராந்தியத்தில் வெள்ளிக்கிழமை 05.12 மணியளவில் பலத்த நிலநடுக்கம் ஏற்பட்டது. பஞ்சாப், சண்டிகர், ஹரியானா, டெல்லி மற்றும் இமாச்சல பிரதேசத்தின் கீழ் பகுதிகள் உட்பட வட இந்தியாவின் பல பகுதிகளிலும் நடுக்கம் ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


ஆப்கானிஸ்தானில் இந்து குஷ் பிராந்தியத்தில் 6.1 மெக்னிக்ட் வலுவான நிலநடுக்கம் ஏற்பட்டதை அடுத்து வட இந்தியாவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் இந்தியாவின் வடக்கு பகுதிகளில் கட்டிடங்களை உலுக்கியதாக சாட்சிகள் தெரிவிக்கின்றனர். டெல்லியின் அண்டை மாநிலங்களான குர்கான் மற்றும் நொய்டா மற்றும் ராஜஸ்தானின் தலைநகர் ஜெய்ப்பூர் ஆகிய இடங்களில் அதிர்வுகளை உணர்ந்ததாக பலர் தெரிவித்தனர். எனினும் இதுவரை எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை.



இந்த நடுக்கம் வடகிழக்கு இந்தியா முழுவதும் வசிப்பவர்களிடையே பீதியைத் தூண்டியது, நில அதிர்வினை தொடர்ந்து பொதுமக்கள் திறந்த பகுதிகளுக்கு தப்பி ஓடுமாறு கட்டையாப்படுத்தப்பட்டனர்.


நில அதிர்வினை அடுத்து ட்விட்டரில் வெளியிடப்பட்ட வீடியோக்களில் நில அதிர்வின் தாக்கத்தை நம்மாள் பார்க்க முடிகிறது. இந்த வீடியோவில் சிலிண்டர்கள் மற்றும் மின்விசிரிகள் நடமாடுவதை நம்மாள் பார்க்க முடிகிறது.