புதுடில்லி: சுதந்திர தின விழா கொண்டாட்டத்தை முன்னிட்டு நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தலைநகர் புதுடில்லி முழுவதும் தீவிர கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நாளை (ஆகஸ்ட் 15) சுதந்திர தினம் கொண்டாடப்பட உள்ளது. புதுடில்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி தேசிய கொடி ஏற்றி உரையாற்றகிறார். இதனையொடுத்து செங்கோட்டை மற்றும் டில்லியின் முக்கிய இடங்களில் தீவிர கண்காணிப்பு செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டது. மேலும் செங்கோட்டையையும், அதைச் சுற்றியுள்ள பகுதிகளையும் கண்காணிக்க 100க்கும் மேற்பட்ட கேமராக்கள். பொருத்தப்பட்டு உள்ளன.



இதனையடுத்து புதுடில்லி முழுவதும் வாகனச் சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. புதுடில்லி காவல்துறையுடன் இணைந்து துணை ராணுவ படையினரும், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். சந்தேகபடும்  நபர்கள் மற்றும் சந்தேகத்திற்குரிய பொருட்கள் தென்பட்டால் போலீசாருக்கு தகவல் அளிக்கும்படி பொதுமக்களை புதுடில்லி போலீசார் கேட்டுக் கொண்டுள்ளனர்.