புதுசேரி: மாணவிகள் கொலை தொடர்பான சம்பவங்கள் தொடர்ந்து வெளியாகி அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகின்றன. தற்போது புதுசேரியை சேஎர்ந்த மாணவி கீர்த்தனா படுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. சன்னியாசிக்குப்பம் மாரியம்மன் கோயில் விதியைச் சேர்ந்த நாகராஜ் என்பவரின் மகள் கீர்த்தனா கலிதீர்த்தால் குப்பம் பகுதியில் உள்ள அரசு கலைக் கல்லூரியில் பி.காம் முதலாம் ஆண்டு பயின்று வருகிறார். 18 வயதே ஆன கல்லூரி மாணவி கீர்த்தனாவை முகேஷ் என்பவர் ஒரு தலைபட்சமாக காதலித்து வந்தார். இந்த ஒரு தலைக் காதல் ஏற்படுத்திய கொடூரக் கொலையால் மாணவி உயிரிழந்துள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

முகேஷின் காதல் கோரிக்கையை ஏற்றுக் கொள்ளாத கீர்த்தனாவிடம் முகேஷ் அடிக்கடி தகராறு செய்து வந்துளார். முகேஷ், கீர்த்தனாவின் உறவினர் என்பதால், கீர்த்தனாவால் பெரிய அளவில் எதுவும் செய்யவில்லை. ஒருகட்டத்தில், தன்னை தவிர்த்து கீர்த்தனா, வேறு யாரிடமும் பேசக்கூடாது என முகேஷ் மிரட்டியிருக்கிறார்.


மேலும் படிக்க | மீண்டும் ஒரு பள்ளி மாணவி தற்கொலை முயற்சி; காதல் விவகாரமா?


நேற்று ( 2022 ஜூலை 19) மாலை கல்லூரி முடித்த பின்னர் வீட்டிற்கு சென்றுக் கொண்டிருந்த கீர்த்தனாவை படுகொலை செய்திருக்கிறார்.  தனியார் பேருந்து மூலம் கல்லூரியில் இருந்து வந்த கீர்த்தனா, சன்னியாசிக்குப்பம் கடைவீதியில் இறங்கி வீட்டிற்கு சென்றுக் கொண்டிருந்தார். அப்போது, கத்தியுடன் மறைந்திருந்த முகேஷ் கீர்த்தனாவின் கழுத்து மற்றும் கை கால் பகுதியில் சரமாரியாக வெட்டி விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றான்.


காயங்களால் நிலைகுலைந்து ரத்த வெள்ளத்தில் கீர்த்தனா சரிந்து கீழே விழுந்தார். இதனைப் பார்த்துப் பதறிய அங்கிருந்தவர்கள், உயிருக்கு போராடிக் கொண்டு இருந்த கீர்த்தனாவை மீட்டு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மாணவி கீர்த்தனா ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துமனையில் தெரியவந்தது. 


மேலும் படிக்க | கள்ளக்குறிச்சி மாணவி மரணம் : பள்ளி தாளாளர் உட்பட 3 பேர் கைது


ஒரு தலைக் காதலினால் செய்யப்பட்ட இந்த கொடூரச் சம்பவம் குறித்து தகவல் அறிந்த திருபுவனை போலீசார், கீர்த்தனாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தப்பி ஓடிய முகேஷை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.


காதலை மறுக்கும் மாணவிகள் மீதான வன்முறைகள் ஏற்படுத்தும் பல்வேறுவிதமான கேள்விகளுக்கு என்று பதில் கிடைக்கும் என்பதும், என்று இந்த கொடுமைக்கு முடிவு வரும் என்ற கவலைகள் எழுகின்றன.


மேலும் படிக்க | School Strike: தன்னிச்சையாக விடுமுறை அளிக்கும் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை: எச்சரிக்கை


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ