Video: பட்டமளிப்பு விழாவில் CAA நகலை கிழித்தெரிந்த மாணவி!
ஜாதவ்பூர் பல்கலைக்கழகத்தில் தங்கப் பதக்கம் வென்ற மாணவி, செவ்வாய்க்கிழமை வளாகத்தில் நடைபெற்ற வருடாந்திர பட்டமளிப்பு விழாவில் குடியுரிமை (திருத்த) சட்டத்தின் நகலைக் கிழித்து எறிந்தார்.
ஜாதவ்பூர் பல்கலைக்கழகத்தில் தங்கப் பதக்கம் வென்ற மாணவி, செவ்வாய்க்கிழமை வளாகத்தில் நடைபெற்ற வருடாந்திர பட்டமளிப்பு விழாவில் குடியுரிமை (திருத்த) சட்டத்தின் நகலைக் கிழித்து எறிந்தார்.
ஜாதவ்பூர் பல்கலை கழகத்தில் International Relations துறையில் தங்கப் பதக்கம் வென்ற மாணவி டெப்ஸ்மிதா சவுத்ரி, குடியுரிமை (திருத்தம்) சட்டத்தின் நகலுடன் தனது பட்டத்தைப் பெறுவதற்காக மேடையில் ஏறி கையிலிருந்து சட்ட திருத்த நகலை பார்வையாளர்கள் முன்னிலையில் கிழித்தெறிந்தார், பார்வையாளர்களைப் பார்த்து, "ஹம் ககாஸ் நஹின் திகாயங்கே (நான் எனது ஆவணங்களைக் காட்ட மாட்டேன்) என்று அறிவித்தார். "
பின்னர், "இன்க்விலாப் ஜிந்தாபாத்!" என்று கூச்சலிட்டு, பார்வையாளர்களை வணங்கி, மேடையை விட்டு வெளியேறுவதற்கு முன்பு தனது பட்டத்தைப் பெற்றார்.
முன்னதாக, பல்கலைக்கழகத்தின் அதிபராக இருக்கும் ஆளுநர் ஜகதீப் தங்கர் வளாகத்தை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது, திருனாமுல் காங்கிரஸ் கட்சி ஆதரவுடைய ஊழியர்கள் சங்கம் மாநாட்டு விழாவில் கலந்து கொண்டு ஆளுநருக்கு எதிராக கோசங்கள் எழுப்பாலாம் என சந்தேகிப்பட்ட நிலையில் ஆளுநர் ஜகதீப் தங்கர் வளாகத்தை விட்டு விரைவில் வெளியேறியதாக கூறப்படுகிறது.
இதனையடுத்து, மாநாட்டு விழாவை துணைவேந்தர் சுரஞ்சன் தாஸ் நடத்தினார். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களில் ஒரு பகுதியினர் ஆளுநரை புறக்கணிக்க அழைப்பு விடுத்தனர், அவரிடமிருந்து பட்டங்களை ஏற்க மறுத்துவிட்டனர். குடியுரிமை (திருத்த) சட்டம் மற்றும் குடிமக்களின் தேசிய பதிவுக்கு எதிராக மாணவர்கள் பேட்ச்களுயும் அணிந்தனர் என கூறப்படுகிறது.
இதுகுறித்து டெப்ஸ்மிதா சவுத்ரி தெரிவிக்கையில்., "எந்த குழப்பமும் இருக்கக்கூடாது. நான் ஜாதவ்பூர் பல்கலைகழகத்திற்கு எந்த அவமரியாதையும் காண்பிக்க விரும்பவில்லை. எனக்கு பிடித்த நிறுவனத்தில் இந்த பட்டம் வழங்கப்பட்டதில் பெருமைப்படுகிறேன். ஆனால், CAA-க்கு எதிரான எனது ஆர்ப்பாட்டத்தை பதிவு செய்ய நான் இந்த மேடையைத் தேர்ந்தெடுத்தேன்... எனது நண்பர்கள் பட்டமளிப்பு இடத்தின் வாயில் அருகே உள்ளிருப்பு போராட்டத்தில் உள்ளனர். மேலும் பல நண்பர்கள் பட்டமளிப்பு விழா அங்கியை அணிந்துக்கொண்டும் மேடை ஏறாமல் தங்களது எதிர்ப்பினை தெரிவித்து வருகின்றனர். இது எங்களின் ஒரு விதமான போராட்டம்" என தெரிவித்தார்.