அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் அவரது மனைவி (அமெரிக்காவின் முதல் பெண்மணி) மெலனியா டிரம்ப் ஆகியோரை உலகின் வலிமையான நாடான இந்தியாவுக்கு வரவேற்க மாணவர்கள் கேன்வாஸ் பெயிண்டிங்கை கையில் எடுத்துள்ளனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதுகுறித்து கேன்வாஸ் வரைந்த மாணவி ஸ்ரிஷ்டி குல்கர்னி தெரிவிக்கையில்., 'அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பை இந்தியாவுக்கு வரவேற்க நாங்கள் விரும்புகிறோம். இந்த ஓவியங்கள் மூலம் நம்மீது இருக்கும் மரியாதை மற்றும் அன்பின் உணர்வைக் காட்டுகிறோம்’ என தெரிவித்துள்ளார்.


உங்கள் தகவலுக்கு, ஜனாதிபதி டிரம்ப் தனது மனைவி மெலனியா டிரம்புடன் பிப்ரவரி 24 அன்று இரண்டு நாள் சுற்றுப்பயணமாக இந்தியா வருகின்றார். இந்த நேரத்தில், அவர் டெல்லியின் அரசுப் பள்ளிகளையும் பார்வையிடுவார், மேலும் கெஜ்ரிவால் அரசாங்கம் பொதுக் கல்வியில் 'மகிழ்ச்சி வகுப்புகளை', எவ்வாறு செயல்படுத்தியது என்பதையும் சரிபார்க்க உள்ளனர்.



தனது இந்திய சுற்றுப்பயணத்தின் போது, ​​மெலனியா டிரம்ப் பிப்ரவரி 25 அன்று டெல்லியின் அரசு பள்ளிகளுக்கு வர இருக்கின்றார். மேலும் அவர் ஒரு மணி நேரம் அங்கேயே இருப்பார் எனவும் தெரிகிறது. மெலனியா டிரம்பை வரவேற்க இந்த நிகழ்வில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா ஆகியோர் கலந்து கொள்வார்கள் என்றும் கூறப்படுகிறது.


அமெரிக்க ஜனாதிபதியின் உயர்மட்ட வருகைக்கான ஏற்பாடுகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. டொனால்ட் டிரம்ப் மற்றும் மெலனியா டிரம்ப் ஆகியோர் பிப்ரவரி 24 அன்று டெல்லிக்கு வருகிறார்கள். இதன் பின்னர் அவர்கள் பிரதமர் நரேந்திர மோடியுடன் குஜராத் செல்வார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. 


பின்னர் அங்கு அவர் மோடெரா ஸ்டேடியத்தை திறந்து வைப்பார் என்றும் தெரிகிறது. இதன் பின்னர், டிரம்ப் தம்பதியினர் தேசிய தலைநகருக்கு திரும்புவதற்கு முன்பு ஆக்ராவில் உள்ள தாஜ்மஹால் சென்று வருவார்கள் என்று திட்ட அறிக்கைகள் கூறுகின்றன.