ஊழல் புகார் காரணமாக கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்ட CBI இயக்குநர் அலோக் வர்மாவுக்கு அநீதி இழைக்கப் பட்டுள்ளது என பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஊழல் புகார் தொடர்பாக CBI இயக்குநர் அலோக் வர்மா, ராகேஷ் அஸ்தானா ஆகியோர் கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்டனர். இதைத்தொடர்ந்து இணை இயக்குநர் எம். நாகேஸ்வர் ராவ் இடைக்கால இயக்குநராகப் பதவி வகித்தது வருகின்றார்.


தன்னிச்சை அமைப்பான CBI-ல் மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கை பெரும் சர்ச்சைகளுக்கு ஆளானது. பின்னர் இதுதொடர்பான விளக்கம் அளித்த CBI, "அலோக் வர்மா தொடர்ந்து CBI அமைப்பின் இயக்குநர் பதவியில் இருப்பார் எனவும், சிறப்பு இயக்குநர் பதவியில் ராகேஷ் அஸ்தானா தொடர்கிறார். மத்திய ஊழல் கண்காணிப்பு அமைப்பு பரிந்துரை செய்ததன் அடிப்படையில் அவர்கள் கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்டனர்'' எனவும் தெரிவித்தது.



எனினும் தன்னைக் கட்டாய விடுப்பில் மத்திய அரசு அனுப்பியதை எதிர்த்து இயக்குநர் அலோக் வர்மா உச்ச நீதிமன்றத்தின் உதவியை நாடினார். நாடுமுழுவதலும் அனைவரது கவனத்தினையும் ஈர்த்துள்ள இந்த வழக்கு தற்போது உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில் தற்போதுத பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சாமி இந்த விவாகரத்தில் CBI இயக்குநர் அலோக் வர்மாவுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.


இதுகுறித்து அவர் தெரிவித்துள்ளதாவது.. 'டெல்லி காவல்துறை ஆணையராக இருந்தபோதே அலோக் வர்மா பற்றி எனக்கு தெரியும். அவர் ஏர்செல் மேக்சிஸ் இதற பிற வழக்குகளில் CBI சார்பாகப் பணிபுரிந்ததைப் பார்த்திருக்கிறேன். அவர் ஒரு நேர்மையான மனிதர். அவருக்கு எதிராக ஏராளமான சதி திட்டம் நடைப்பெற்று வருகிறது. ஊழலுக்கு எதிரான நமது பிரச்சாரத்தை இது காயப்படுத்துகிறது. உச்ச நீதிமன்றம் அவருக்கு நியாயம் வழங்கும் என்று நம்புகிறேன்'' என தெரிவித்துள்ளார்.