மத்திய அரசுக்கு எதிராக காங்கிரஸ் மற்றும் தெலுங்கு தேசம் கட்சி கொண்டுவந்துள்ள நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு சுமித்ரா மகாஜன் அனுமதி அளித்துள்ளார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பரபரப்பான சூழலில் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. இந்த கூட்டத்தொடரில் முத்தலாக உள்ளிட்ட முக்கிய மசோதாக்கள் நிறைவேற்ற அரசு ஆர்வம் காட்டிவருகிறது. இதற்கிடையில் ஆளும் பாஜக அரசுக்கு எதிராக தெலுங்கு தேசம் கட்சி நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர முனைப்பு காட்டி வந்தது.


இந்நிலையில் தற்போது மத்திய அரசுக்கு எதிராக காங்கிரஸ் மற்றும் தெலுங்கு தேசம் கட்சி கொண்டுவந்துள்ளது. இந்த தீர்மானத்திற்கு அனைத்து எதிர் கட்சிகளும் ஆதரவு தெரிவித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


ஆந்திர மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்த்து வழங்கக் கோரி ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு அவர்கள் மத்திய அரசுக்கு பலமுறை நெருக்கடி கொடுத்து வந்தார், அதை மத்திய அரசு ஏற்காததால் பாஜக கூட்டணியில் இருந்து தெலுங்கு தேசம் கட்சி விலகியது. 


இதனையடுத்து மத்திய அரசுக்கு எதிராக பல்வேறு வகையிலும் தெலுங்கு தேச கட்சி எதிரிப்பு தெரிவித்து வருகின்றது. இதற்கு நாட்டின் பிரதான கட்சிகள் பலவும் ஆதரவு தெரிவித்து வந்தனர். 


இந்நிலையில் தற்போது மத்திய அரசுக்கு எதிராக மீண்டும் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர முடிவெடுத்துள்ளது. இதற்கு திமுக, தெலுங்கானா ராஷ்டிர சமிதி ஆகிய கட்சிகளின் ஆதரவை அக்கட்சி கோரியுள்ளது.


முன்னதாக மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர தீர்மானித்தப்போது காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் ஆதரவு அளித்தன. எனினும் அதிமுக, தெலுங்கானா ராஷ்டிர சமிதி ஆகிய கட்சிகள் காவிரி உள்ளிட்ட தங்களது மாநில பிரச்னைகளுக்காக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் நாடாளுமன்றம் முடங்கியது. இதனால் தெலுங்கு தேசம் கட்சியால் நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வர முடியவில்லை.



இந்நிலையில், நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நாளை தொடங்கவுள்ள நிலையில் மத்திய அரசுக்கு மீண்டும் நெருக்கடி கொடுக்க உள்ளதாக தெலுங்கு தேசம் கட்சி MP-க்கள் தெரிவித்தனர். இதற்கு மற்ற எதிர்க்கட்சிகள் ஆதரவு அளிக்க வேண்டும் என தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு கோரிக்கை விடுத்துள்ளார்.