சுனந்தா புஷ்கர் மரண வழக்கு: சசி தரூருக்கு ஜாமீன் வழங்கியது நீதிமன்றம்!
சுனந்தா புஷ்கர் மரண வழக்கில் சசி தரூருக்கு டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது!
சுனந்தா புஷ்கர் மரண வழக்கில் சசி தரூருக்கு டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது!
முன்னாள் மத்திய அமைச்சரும், மூத்த காங்கிரஸ் தலைவருமான சசிதரூர் இரண்டு முறை திருமணமாகி விவாகரத்து பெற்றவர். இந்நிலையில் காஷ்மீர் தொழிலதிபர் சுனந்தா புஷ்கரை மூன்றாவது மனைவியாக காதலித்து மணந்து கொண்டார்.
இதற்கிடையில் சசிதரூருக்கும் பாகிஸ்தான் பெண் பத்திரிகையாளர் மெஹர் தரார்-க்கும் தொடர்பு இருப்பதாக பேசப்பட்டது. இதனால் சசிதரூர் - சுனந்தா தம்பதியினர் இடையே பிரச்சணைகள் வலுக்க துவங்கியது.
இந்நிலையில் கடந்த 2014-ம் ஆண்டு டெல்லி லீலா பேலஸில் மர்மமான முறையில் சுனந்தா சடலமாக மீட்கப்பட்டார். சுனந்தாவின் உடலை பிரேத பரிசோதனை செய்த AIIMS டாக்டர் குழு அவருடைய உடலில் விஷம் கலந்து இருப்பதாக உறுதிப்படுத்தியது.
இதையடுத்து, சுனந்தா புஷ்கரின் மரண வழக்கில், சசி தரூர் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு, அவருக்கு டெல்லி போலீசார் நேரில் ஆஜராகும் படி சம்மன் அனுப்பியுள்ளனர். விசாரணையின் போது கைது செய்யப்படலாம் என்று கருதி, சசி தரூர் முன் ஜாமீன் கோரி டெல்லி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த ஜாமீன் மனு மீதான விசாரணையில் அவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி டெல்லி அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் அவர் வெளிநாட்டுக்கு செல்லக்கூடாது என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்த நிலையில், அமர்வு நீதிமன்றம் ஜாமீன் அளித்ததை தொடர்ந்து ஜாமீன் கோரி டெல்லி பட்டியாலா நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். இன்று ஆஜரான அவருக்கு பட்டியாலா நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.