தேசிய கிரிக்கெட் அகாடமியின் தலைவராக ராகுல் திராவிட் நியமிக்கப்பட்டதில் ஆதாயம் தரும் இரட்டைப் பதவி புகார்கள் எதுவும் இல்லை என்று உச்ச நீதிமன்றம் நியமித்த CoA நற்சான்றிதழ் அளித்துள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தேசிய கிரிக்கெட் அகாடமியின் தலைவராக ராகுல் திராவிட் பெயர் சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான ராகுல் திராவிட் இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் வைஸ்-பிரசிடெண்ட் பதவியிலும் இருந்து வருகிறார். ஐபிஎல் அணியான சென்னை சூப்பர் கிங்ஸ் இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்துடன் தொடர்புடையது. எனவே இவர் எப்படி தேசிய கிரிக்கெட் அகாடெமியின் கிரிக்கெட் தலைமை பதவி வகிக்க முடியும் என்று டிகே ஜெயின் தரப்பில் ராகுல் திராவிட்டுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. 


இந்த விவகாரம் தொடர்பாக ரவி தோக்டே தெரிவிக்கையில்., “ராகுல் திராவிட் விவகாரத்தில் ஆதாயம் தரும் இரட்டைப் பதவி புகார் எதுவும் இல்லை, இனி டிகே ஜெயின் முடிவெடுக்கட்டும் எங்களைக் கேட்டால் நாங்கள் திராவிடுக்கு நற்சான்றிதழ் வழங்கி விட்டோம் என்று தெரிவிப்போம். டிகே ஜெயின் இரட்டைப்பதவி நலன் இருக்கிறது என்றால் நாங்கள் எங்கள் பதிலை அவர்களுக்கு அளிப்போம். அதாவது ஏன் இரட்டைப் பதவி இல்லை என்று பதில் அளிப்போம்” என தெரிவித்துள்ளார்.


இதுகுறித்து பிசிசிஐ தெரிவிக்கையில்., ‘தேசிய கிரிக்கெட் அகாடெமி பணியில் திராவிட் அமர்த்தப்பட்ட போது இந்தியா சிமெண்ட்ஸ் பணியை விட வேண்டும் அல்லது விடுப்பில் வர வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. இதனையடுத்து சம்பளம் இல்லாத விடுப்புக்கு திராவிட் இந்தியா சிமெண்ட்ஸிடம் கோரியுள்ளார். ஆகவே ஆதாயம் தரும் இரட்டைப் பதவி விவகாரம் இப்போது இல்லை’ என கூறப்பட்டுள்ளது.


தேசிய கிரிக்கெட் அகாடெமியை சர்வதேச தரத்துக்கு உயர்த்த திராவிடுடன் சேர்ந்து திட்டங்களை வகுத்துள்ளோம், அவரும் தன் ஆலோசனைகளை வழங்கியுள்ளார் என்று கூறிய தொகாடியா அவருடன் சேர்ந்து பணியாற்ற உள்ளோம் எனவும் உறுதியளித்துள்ளது.