புதுடெல்லி: டெல்லி மற்றும் என்சிஆர் சாலைகளில் பட்டாசு விற்க தடை விதித்து சுப்ரீம் கோர்ட்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தீபாவளி முடிந்த பிறகு காற்றுமாசுபாடு டெல்லியில் மோசமான நிலையில் உள்ளது. மக்கள் மற்றும் குழந்தைகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்த பல நடவடிக்கை எடுத்தும் பலனளிக்கவில்லை. கட்டுமான பணிகளுக்கு தடை விதிக்கப்பட்டது. இருப்பினும் காற்று மாசுபாட்டின் அளவு குறையவில்லை.


இந்நிலையில் இன்று இது தொடர்பான வழக்கை ஒன்றை விசாரித்த சுப்ரீம் கோர்ட், டெல்லி மற்றும் என்சிஆர் சாலைகளில் பட்டாசு விற்க தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. மேலும், இந்த பகுதிகளில் உள்ள பட்டாசு கடைகளுக்கு வழங்கப்பட்டுள்ள லைசென்ஸ்கள் உடனடியாக ரத்து செய்யப்பட்டுள்ளது.