கொரோனா 2-வது அலையினால் நாடு முழுவதும் ஏராளமானோர் உயிரிழந்தனர். கொரோனா மரணங்களுக்கு இழப்பீடு வழங்கக்கோரி தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.50 ஆயிரம் இழப்பீட்டுத்தொகை வழங்க உத்தரவிட்டது. மாநிலங்களின் பேரிடர் நிவாரண நிதியில் இருந்து இந்த உதவித்தொகை வழங்கப்படுமென தெரிவிக்கப்பட்டது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


இந்த இழப்பீட்டை பெறுவதற்காக போலி ஆவணங்கள் தயாரிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த குற்றச்சாட்டு குறித்து தொடரப்பட்ட வழக்கு நீதிபதிகள் எம்.ஆர்.ஷா, நாகரத்னா ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. மத்திய அரசு மற்றும் குஜராத் அரசு தரப்பில் ஆஜரான சாலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, கொரோனா இழப்பீட்டுத் தொகையைப் பெற போலி சான்றிதழ்கள் வழங்கப்படுவதை  உறுதி செய்தார்.


மேலும் படிக்க | எச்சரிக்கை! கொரோனா இன்னும் போகவில்லை, புதிய ஆபத்து வருது


இதற்கு கடும் அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள், தங்கள் அன்புக்குரியவர்களை இழந்த குடும்பங்களுக்கும், அனாதை குழந்தைகளுக்கும்  வாழ்வாதாரத்தை வழங்குவதற்காக அளிக்கப்படும் உதவிகளைப் போலியாக பெறும் அளவுக்கு சமுதாயத்தில் ஒழுக்கம் குறைந்து போகும் என்று தாங்கள் ஒருபோதும் நினைக்கவில்லை எனக் குறிப்பிட்டனர். கொரோனா இழப்பீடு பெற போலி ஆவணம் தருவது பற்றி விசாரிக்க வேண்டியது அவசியமாகிறது எனக் குறிப்பிட்ட நீதிபதிகள் உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிட தலைமைக் கணக்குத் தணிக்கையாளருக்கு உத்தரவிட்டனர்.  


மேலும் படிக்க | கொரோனாவில் இருந்து காப்பாற்றும் வைட்டமின் டி? சாப்பிட வேண்டிய உணவுகள்


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR