கொரோனாவில் இருந்து காப்பாற்றும் வைட்டமின் டி? சாப்பிட வேண்டிய உணவுகள்

வைட்டமின் டி குறைபாடு உள்ளவர்களுக்கு கொரோனா தொற்று அபாயம் 14 மடங்கு அதிகம் என இஸ்ரேலில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது.

Written by - S.Karthikeyan | Last Updated : Feb 5, 2022, 08:57 PM IST
  • கொரோனாவை தடுக்கிறதா வைட்டமின் டி?
  • இஸ்ரேல் ஆய்வாளர்கள் கண்டுபிடிப்பு
  • வைட்டமின் டி உணவுகளை சாப்பிட அறிவுறுத்தல்
கொரோனாவில் இருந்து காப்பாற்றும் வைட்டமின் டி? சாப்பிட வேண்டிய உணவுகள் title=

கொரோனா வைரஸ் ஆட்டிப்படைத்து வரும் இந்த சூழலில் அதனை முற்றிலுமாக ஒழிக்க ஆய்வாளர்கள் இரவுபகலாக ஆய்வில் ஈடுபட்டு வருகின்றனர். இஸ்ரேலில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்றில் வைட்டமின் டி குறைபாடு கொரோனா வைரஸில் இருந்து பாதுகாப்பதில் முக்கிய பங்கு வகிப்பதாக ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். மற்றவர்களைக் காட்டிலும் வைட்டமின் டி குறைபாடு உடையவர்களுக்கு 14 மடங்கு அதிகமாக கொரோனா தொற்றினால் ஏற்படும் ஆபத்து அதிகம் என்றும் அவர்கள் கூறியுள்ளனர். 

ALSO READ | வாயு பிரச்சனையில் இருந்து விடுபடுவது எப்படி? வீட்டு மருத்துவம்

இஸ்ரேலில் இருக்கும் பார் இலன் பல்கலைக்கழக ஆய்வாளர்கள், கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா நோய் தொடர்பான ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகின்றனர். 2020 முதல் 2021 வரை சுமார் 253 கோவிட் நோயாளிகளை அவர்கள் ஆய்வு செய்தனர். அதில், வைட்டமின் டி குறைபாடு உள்ளவர்கள் 87% கொரோனா வைரஸின் கடுமையான ஆபத்துகளை சந்தித்துள்ளனர். 

இது குறித்து ஆய்வாளர்கள் பேசும்போது, வைட்டமின் டி குறைபாடு இருக்கும் நோயாளிகளிடம் கொரோனா பாதிப்பு அதிகம் இருந்ததாகவும், சிகிச்சையில் மற்ற மருந்துகளுடன் வைட்டமின் டி அளவை அதிகரித்தபோது குறிப்பிடத்தகுந்த ரிசல்ட் கிடைத்தாகவும் தெரிவித்துள்ளனர். நோய் எதிர்ப்பு மண்டலம் பலமாகவும், வைரஸை எதிர்த்து போராடுவதிலும் வைட்டமின் டி-யின் பங்கு மிக முக்கியமானது எனத் தெரிவித்துள்ள ஆய்வாளர்கள், சூரிய ஒளி மூலம் கிடைக்கும் வைட்டமின் டி கொரோனாவை கட்டுப்படுத்துவதாக தெரிவித்துள்ளனர். மேலும், வைட்டமின் டி நிறைந்த உணவுகளை அதிகம் எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் ஆய்வாளர்கள் பரிந்துரைத்துள்ளனர். 

ALSO READ | தலைக்கு குளிக்கும்போது முடி அதிகம் கொட்டுகிறதா? இப்படி செய்து பாருங்கள்

மீன், முட்டையின் மஞ்சள் கரு, சிவப்பு இறைச்சி, பால், ஆரஞ்சு பழம், சூரிய ஒளியில் வளர்க்கப்பட்ட காளான் மற்றும் கீரைகளில் அதிகளவு வைட்டமின் டி உள்ளது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News