எதைக் கொண்டாடுகிறீர்கள்?...ஜாமீனில் வெளிவந்தருக்கு போஸ்டர் ஒட்டியதைக் கண்டித்த உச்சநீதிமன்றம்
![எதைக் கொண்டாடுகிறீர்கள்?...ஜாமீனில் வெளிவந்தருக்கு போஸ்டர் ஒட்டியதைக் கண்டித்த உச்சநீதிமன்றம் எதைக் கொண்டாடுகிறீர்கள்?...ஜாமீனில் வெளிவந்தருக்கு போஸ்டர் ஒட்டியதைக் கண்டித்த உச்சநீதிமன்றம்](https://tamil.cdn.zeenews.com/tamil/sites/default/files/styles/zm_500x286/public/2022/04/12/220848-new-project-29.jpg?itok=PIGunD2t)
பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர் ஜாமீனில் வெளிவந்ததை வரவேற்க சுவரொட்டிகள் ஒட்டப்பட்டதற்கு உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.
மத்தியப் பிரதேசத்தை சேர்ந்த ஏபிவிபி தலைவரான ஷுபாங் கோண்டியா என்பவர், தன்னை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி பாலியல் வன்கொடுமை செய்ததாக பெண் ஒருவர் கடந்த 2021-ம் ஆண்டு ஜபல்பூர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இதன் அடிப்படையில் ஷுபாங் கோண்டியா கைது செய்யப்பட்டார். பின்னர், கடந்த நவம்பர் மாதம் மத்தியப் பிரதேச உயர்நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்கியது.
இதனை எதிர்த்து பாதிக்கப்பட்ட பெண் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். ஷுபாங் கோண்டியா தன்னை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி ஏமாற்றியதோடு கட்டாயக் கருக்கலைப்பு செய்ததாகவும், இந்த வழக்கின் தீவிரத்தன்மையை உணராமல் உயர்நீதிமன்றம் ஷுபாங் கோண்டியாவுக்கு ஜாமீன் வழங்கியதாகவும் பாதிக்கப்பட்ட பெண் தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார். மேலும் ஷுபாங் பாண்டியா ஜாமீனில் வெளிவந்த போது அவரை சுவரொட்டிகள் ஒட்டி வரவேற்றதாகவும் பாதிக்கப்பட்ட பெண் மனுவில் கூறியிருந்தார்.
மேலும் படிக்க | மாணவர்கள் கல்வியில் மட்டும் கவனம் செலுத்தவும்: உச்ச நீதிமன்றம் காட்டம்
இந்த மனு தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது குற்றம் சாட்டப்பட்டவர் ஜாமீனில் வெளி வந்தபோது சுவரொட்டிகள் ஒட்டி வரவேற்கப்பட்டதை அறிந்து நீதிபதிகள் கடும் கண்டனம் தெரிவித்தனர். 'Bhaiya is back' என சுவரொட்டிகளில் வாசகங்கள் இருந்ததை சுட்டிக்காட்டிய நீதிபதி ஹீமா ஹோலி, நீங்கள் எதைக் கொண்டாடுகிறீர்கள்? எனக் கேள்வி எழுப்பினார். 'உங்கள் பையாவை இன்னும் ஒரு வாரத்திற்கு கவனமாக இருக்கச் சொல்லுங்கள்' எனக் குற்றம் சாட்டப்பட்டவரின் வழக்கறிஞரிடம் தலைமை நீதிபதி என்.வி.ரமணா கண்டனம் தெரிவித்தார்.
ஷுபாங் கோண்டியாவின் ஜாமீனை ஏன் ரத்து செய்யக்கூடாது என்று கேட்டு அவருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ள உச்சநீதிமன்றம், மத்தியப் பிரதேச அரசும் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை வரும் 18-ம் தேதிக்கு ஒத்தி வைத்தது.
மேலும் படிக்க | முல்லைப் பெரியாறு அணை: கேரள அரசு கோரிக்கையை உச்ச நீதிமன்றம் நிராகரித்தது
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR