புது தில்லிஅயோத்தி நில தகராறு வழக்கில் சுப்ரீம் கோர்டில் தாக்கல் செய்த 18 மறுபரிசீலனை மனுக்கள் குறித்து இன்று (வியாழக்கிழமை) உச்ச நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றது. தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே தலைமையிலான 5 நீதிபதிகள் அடங்கிய அரசியலமைப்பு பெஞ்ச் அனைத்து மனுக்களையும் நிராகரித்தது. நீதிபதி அசோக் பூஷண், நீதிபதி எஸ்.ஏ.நஜீர், நீதிபதி டி.ஒய் சந்திரசூட் மற்றும் நீதிபதி சஞ்சீவ் கண்ணா ஆகியோர் மற்ற நான்கு நீதிபதிகள் ஆவார்கள்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சர்ச்சைக்குரிய 2.7 ஏக்கர் நிலத்தில் அறக்கட்டளை மூலம் கோயிலுக்கும், முஸ்லீம் தரப்பினருக்கும் மசூதியை கட்ட அயோத்தியில் 5 ஏக்கர் நிலம் வழங்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் நவம்பர் 9 அன்று உத்தரவிட்டது. இந்த முடிவை மறுபரிசீலனை செய்ய 18 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்த மனுக்களில் பெரும்பாலானவை தீர்ப்பில் அதிருப்தி அடைந்த முஸ்லிம் தரப்பினரிடம் இருந்து வந்தவை. நிர்மோஹி அகாராவும் நேற்று (புதன்கிழமை) மறுஆய்வு மனுவை தாக்கல் செய்தார்.


ஜாமியத்தின் செயலாளர் முதல் மனுவை தாக்கல் செய்தார்:
அயோத்தி வழக்கு தொடர்பான உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து முதல் மறுபரிசீலனை மனு ஜமியத் பொதுச்செயலாளர் மவுலானா சையத் அஷ்த் ரஷிதி தாக்கல் செய்தார். அதில் நீதிமன்றத்தின் இறுதி தீர்ப்பையும் மறுபரிசீலனை செய்யலாம் என்று அரசியலமைப்பின் 137 வது பிரிவில் கூறப்பட்டு உள்ளது. அதன் அடிப்படையில் மறுபரிசீலனை மனு தாக்கல் செய்யலாம் என்றும் கூறியிருந்தது.


ரஷிதி 217 பக்க ஆவணங்களை சமர்ப்பித்தார்:
இந்த மனுவுடன் ரஷிதி 217 பக்க ஆவணங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பித்தார். அதில் சர்ச்சைக்குரிய இடித்ததில் நமாஸ் படிக்கப்பட்டதாக நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது, ஆனால் முஸ்லிம்கள் விலக்கப்பட்டனர். ராமர் சிலை 1949 ஆம் ஆண்டில் சட்டவிரோதமாக கட்டிடத்தில் வைக்கப்பட்டது, ஆனால் ராம்லாலாவுக்கு முழு நிலமும் வழங்கப்பட்டது. அனைத்து தரப்பினருக்கும் இடையில் சமநிலையை ஏற்படுத்தும் முயற்சியில் இந்து தரப்பு சட்டவிரோத நடவடிக்கையை உச்ச நீதிமன்றம் புறக்கணித்தது.


நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு முரணானது என்று மனுவில் கூறப்பட்டுள்ளது:
நீதிமன்றத்தின் தீர்ப்பின் முதல் மற்றும் இரண்டாம் பகுதி முரணானது என்று மனுவில் கூறப்பட்டுள்ளது. கோயிலை இடிப்பதன் மூலம் மசூதி கட்டப்படவில்லை என்று நீதிமன்றம் ஒப்புக்கொண்டது. 1992 மசூதி சர்ச்சை சட்டவிரோதமானது. பின்னர் நீதிமன்றம் இந்த நிலத்தை மற்ற தரப்பினருக்கு ஏன் கொடுத்தது? முஸ்லீம் தரப்பினருக்கு 5 ஏக்கர் மாற்று நிலம் வழங்கப்பட்டது, அது நீதிமன்றத்தில் இருந்து எதிர்பார்க்கப்படவில்லை அல்லது கோரப்படவில்லை எனவும் அவர் கூறியுள்ளார். 


முஸ்லீம் தனிநபர் சட்ட வாரியமும் மறுஆய்வு செய்ய கூறியது:
அகில இந்திய முஸ்லீம் தனிநபர் சட்ட வாரியம் (ஏ.ஐ.எம்.பி.எல்.பி) கடந்த வாரம், நாட்டின் 99% முஸ்லிம்களும் அயோத்தி குறித்த உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை மறுஆய்வு செய்ய விரும்புவதாகக் கூறினர். 


சர்ச்சைக்குரிய நிலத்தை நீதிமன்றம் இந்து தரப்பில் ஒப்படைத்தது:
நவம்பர் 9 ஆம் தேதி, 40 நாள் தொடர்ச்சியான விசாரணைக்குப் பின்னர், உச்சநீதிமன்றத்தின் 5 நீதிபதிகள் கொண்ட பெஞ்ச், அயோத்தியின் சர்ச்சைக்குரிய நிலத்தை இந்து தரப்பில் சமர்ப்பித்தது. வேறொரு இடத்தில் 5 ஏக்கர் நிலத்தை முஸ்லிம் தரப்புக்கு வழங்க உத்தரபிரதேச அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.


தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள்:
இந்த வழக்கை தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், நீதிபதிகள் எஸ்.ஏ.போப்டே, டி.ஒய் சந்திரசூட், அசோக் பூஷண், மற்றும் எஸ் அப்துல் நசீர் ஆகியோர் அடங்கிய ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியலமைப்பு பெஞ்ச், கிட்டத்தட்ட 40 நாட்களுக்கு அன்றாட விசாரணை அடிப்படையில் விசாரித்து அக்டோபர் மாதம் தனது தீர்ப்பினை வழங்கியது. 


நாட்டின் 2வது நீண்ட விசாரணை வழக்கு:
68 நாட்கள் நீடித்த வரலாற்று கேசவானந்த பாரதி வழக்கின் பின்னர், 40 நாள் நீடித்த அயோத்தி வழக்கு உச்சநீதிமன்ற வரலாற்றில் இரண்டாவது மிக நீண்ட விசாரணையாக மாறியது. 


உங்களுக்கு சுவாரஸ்யமான சிறப்பு செய்தி, முக்கிய செய்திகள், அரசியல் குறித்து விவரங்களை தெரிந்துக்கொள்ள நமது ZEE HINDUSTAN TV ஐ பாருங்கள். தற்போது ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒளிப்பரப்பாகிறது.