கால்நடை தீவன ஊழல் வழக்கில் லாலு பிரசாத் யாதவின் ஜாமீன் 
மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஊழல் வழக்கில் சிறையில் உள்ள ராஷ்ட்ரீய ஜனதா தளம் தலைவர் லாலு பிரசாத், ஜாமீன் கேட்டு தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. 1990-களில் லாலு பிரசாத் பீகார் முதல்வராக இருந்தபோது, அரசு சார்பில் மாட்டுத்தீவனம் வாங்கியதில் ஊழல் செய்தார் என்று குற்றச்சாட்டு எழுந்தது. இந்த வழக்கில் சிறை தண்டனை விதிக்கப்பட்ட அவர், ஜார்க்கண்ட் மாநிலத்தின் ராஞ்சியில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அதே நேரம், தனக்கு உடல்நிலை சரியில்லை என்று கூறி மருத்துவமனையில் சேர்ந்து கொண்ட அவர், அங்கு அரசியல் தலைவர்களை சந்தித்து ஆலோசனை மேற்கொள்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.


இந்நிலையில், லாலு பிரசாத் ஜாமீன் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனு தொடர்பாக சிபிஐ நேற்று பதில் அளித்தபோது, தேர்தல் சமயத்தில் அரசியல் காரணங்களுக்காகவே லாலு பிரசாத் ஜாமீன் கேட்பதாகக் கூறியிருந்தது. இந்நிலையில், லாலுவின் ஜாமீன் மனுவை உச்சநீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்துள்ளது.