புதுடெல்லி: நீதிமன்ற அவமதிப்பு வழக்கு விசாரணைக்கு ஆஜராகாததால், சென்னையை சேர்ந்த நீதிபதி கர்ணனுக்கு சுப்ரீம் கோர்ட் வாரண்ட் பிறப்பித்துள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கோல்கட்டா ஐகோர்ட் நீதிபதி கர்ணனுக்கு எதிராக ஜாமினில் வெளிவரக்கூடிய வாரன்ட் பிறப்பித்து சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. 


இது குறித்த விவகாரத்தில் ஏற்கனவே 2 முறை உத்தரவிட்டும் நீதிமன்றத்தில் ஆஜராகாததால், சுப்ரீம் கோர்ட் இன்று வாரண்ட் பிறப்பித்துள்ளது.


கர்ணன் தற்போது மேற்கு வங்க ஐகோர்ட்டில் நீதிபதியாக பணியாற்றி வருகிறார்.


சென்னை ஐகோர்ட் நீதிபதியாக இருந்த கர்ணன், கோல்கட்டா ஐகோர்ட் நீதிபதியாக இடமாற்றம் செய்யப்பட்டார். அங்கு, அவர், பிரதமர் அலுவலகம், சட்டத்துறை அமைச்சகம், சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி உள்ளிட்டோருக்கு புகார் கடிதங்களை அனுப்பினார். இதனை சுப்ரீம் கோர்ட் தாமாக முன்வந்து கோர்ட் அவமதிப்பு வழக்காக பதிவு செய்து விசாரணை செய்து வருகிறது. இந்த வழக்கில் ஆஜராக கர்ணனுக்கு இரண்டு முறை உத்தரவிடப்பட்டது. ஆனால், அவர் ஆஜராகவில்லை. 


இந்நிலையில், இந்த வழக்கு இன்று தலைமை நீதிபதி கேஹர் மற்றும் நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, செலமேஸ்வர், ரஞ்சன் கோகாய், மதன் பி லோகூர், பினாகி சந்திரகோஸ், குரியன் ஜோசப் பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது கர்ணனுக்கு எதிராக ஜாமினில் வெளிவரக்கூடிய வாரன்ட் பிறப்பித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.