ரஃபேல் விவகாரத்தி மோடியை விமர்சித்த ராகுல் காந்திக்கு SC நோட்டீஸ்!!
ரஃபேல் விவகாரத்தில் பிரதமர் மோடியை திருடன் என விமர்சித்ததாக தொடரப்பட்ட வழக்கில் ராகுல் காந்திக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்
ரஃபேல் விவகாரத்தில் பிரதமர் மோடியை திருடன் என விமர்சித்ததாக தொடரப்பட்ட வழக்கில் ராகுல் காந்திக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்
கடந்த 2016 ஆம் ஆண்டு செப்டம்பர் 23 ஆம் தேதி பிரான்சிடம் இருந்து, ரஃபேல் போர் விமானங்களை வாங்க, ரூ. 58 ஆயிரம் கோடி மதிப்பில் 36 ரஃபேல் போர் விமானங்களை வாங்குவதற்கு மத்திய அரசு ஒப்பந்தம் செய்துள்ளது. இந்நிலையில், இந்த கொள்முதல் ஒப்பந்தத்தில் பெரிய அளவில் முறைகேடுகள் நடந்திருப்பதாக காங்கிரஸ் கட்சியினர் குற்றம்சாட்டி வருகின்றனர். ரஃபேல் ஒப்பந்தத்தில் முறைகேடு குறித்த காங்கிரஸ் காட்சியின் புகாருக்கு பாஜக தொடர்ந்து பதிலடி கொடுத்து வருகிறது.
இந்நிலையில், தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் ராகுல் காந்தி பேசும்போது, மோடியை திருடன் என்று உச்சநீதிமன்றமே சொல்லிவிட்டது என்றார். ஆனால், உச்சநீதிமன்ற உத்தரவில் இல்லாத விஷயத்தை பேசியதன் மூலமாக, நீதிமன்றத்தை ராகுல் காந்தி அவமதித்துவிட்டார் என்று பாஜக குற்றம்சாட்டியது. இதுதொடர்பாக அக்கட்சியின் மூத்த தலைவர் மீனாட்சி லேகி உச்சநீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார். அதில் ரபேல் ஒப்பந்தம் குறித்த வழக்கில் பிரதமர் குறித்து உச்சநீதிமன்றம் எந்த கருத்தும் தெரிவிக்காத நிலையில், உச்சநீதிமன்ற உத்தரவை தவறாக ராகுல்காந்தி குறிப்பிட்டுள்ளதாக குற்றம்சாட்டியுள்ளார்.
இந்த வழக்கு நேற்று தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மீனாட்சி லெகி சார்பில் மூத்த வக்கீல் முகுல் ரோத்தகி ஆஜராகி வாதாடினார். அப்போது அவர், ‘காவலாளி ஒரு திருடன் என சுப்ரீம் கோர்ட்டு கூறியதாக ராகுல் காந்தி கூறி வருகிறார்’ என்று தெரிவித்தார். இந்த வழக்கு இன்று ஒத்திவைக்கப்பட்டது.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்ததும் பிரதமர் மோடியை விமர்சனம் செய்த ராகுல் காந்திக்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ் அனுப்ப உத்தர விட்டது. மேலும் இது தொடர்பாக அடுத்த வாரம் திங்கட்கிழமைக்குள் ராகுல்காந்தி பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை வரும் 22 ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.