சுப்ரீம் கோர்ட் மூத்த நீதிபதியான செல்லமேஸ்வர் இன்றுடன் ஓய்வு பெறுகிறார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதிக்கு அடுத்து இரண்டாவது இடத்தில் செல்லமேஸ்வர் உள்ளார். இவர் சுப்ரீம் கோர்ட் மூத்த நீதிபதியாவார்.


கடந்த ஜனவரி 12 அன்று சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி குறித்து புகார் அளிக்க செய்தியாளர் சந்திப்பை கூட்டி சர்ச்சையை ஏற்படுத்திவர் செல்லமேஸ்வர். சுப்ரீம் கோர்ட் மூத்த நீதிபதி செல்லமேஸ்வரர் உட்பட 4 நீதிபதிகள் தலைமை நீதிபதிக்கு எதிராக போர்க்கொடி தூக்கினர். வழக்குகள் ஒதுக்கப்படுவதில் பாரபட்சம் காட்டப்படுவதாக தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா மீது அவர்கள் புகார் தெரிவித்தனர். இதனால், நீதித்துறையில் பரபரப்பு ஏற்பட்டது. இந்த 4 நீதிபதிகளில்  செல்லமேஸ்வர் முக்கியமானவர் ஆவார்.  இதனால் இவருடைய  கருத்துகளும் செயல்களும் சர்ச்சைக்கு உள்ளானது.


இந்நிலையில் ஏழு ஆண்டுகளாக சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக பணியாற்றியுள்ள செல்லமேஸ்வரர் இன்று தமது 65வது பிறந்த நாளில் ஓய்வு பெறுகிறார். ஜனநாயகத்தை காப்பதில் செல்லமேஸ்வர் சிறப்பாகப் பணியாற்றியதாக மூத்த  நீதிபதிகளும் வழக்கறிஞர்களும் அவருக்கு புகழாரம் சூட்டினர்.