கேரளா மக்களின் உதவிக்கான நிகழ்ச்சியில் பாடல்கள் பாடிய உச்சநீதிமன்ற நீதிபதிகள்
கேரளாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் பாடல்களை பாடி அசத்திய நீதிபதிகள்.
டெல்லி: கேரளாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் பாடல்களை பாடி அசத்திய நீதிபதிகள்.
கேரளாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ ஒரு தனித்துவமான முன் முயற்சி உச்சநீதிமன்ற எடுத்துள்ளது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்ய ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு தொண்டு நிகழ்ச்சியில் உச்சநீதிமன்ற நீதிபதி கே.எம். ஜோசப் மற்றும் நீதிபதி குரியன் ஜோசப் ஆகியோர் பாடல்கள் பாடினார். இந்த நிகழ்ச்சி உச்ச நீதிமன்றத்தின் வளாகத்தில் பத்திரிகையாளர்கள் சங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் நீதிபதிகள் பாடல் மற்றும் இசை நீதிமன்ற வளாகத்தில் எதிரொலிக்கும் போது இது ஒரு தனிச்சிறப்பு வாய்ந்ததாக இருந்தது.
கேரளாவின் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்ய நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த நிகழ்சியில் உச்ச நீதிமன்றம் நீதிபதிகள் கலந்துக்கொண்டனர். உச்ச நீதி மன்ற நீதிபதிகள் நிகழ்ச்சியில் பாடல்கள் பாடியது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. உச்ச நீதிமன்ற நீதிபதி குரியன் ஜோசப், "நாங்கள் வெற்றி பெறுவோம்.. நாங்கள் வெற்றி பெறுவோம்... நாம் ஒரு நாள் வெற்றி பெறுவோம்.." என்ற பாடலை பாடினார். பின்னர் நீதிபதி கே.எம் ஜோசப், யேசுதாஸின் பாடலான "மதுபன் வாசனை தரும்" என்ற பாடலை பாடியதோடு, மீனவர்களின் வாழ்வாதாரத்தை குறித்த ஒரு மலையாள பாடலையும் பாடினார்.
இந்த நிகழ்ச்சியில் பாடகர் மொஹித் சொஹான், தனது குரலால் வசீகரித்தார். உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமை தாங்கினார். இதில் நீதிபதிகள் குரியன் ஜோசப், கே.எம். ஜோசப், மடான் பி. லோகுர், நீதிபதி தீபக் குப்தா, நீதிபதி ஏ.எம். கான்வில்கர் மற்றும் நீதிபதி டி.ஜே.சந்திரச்சாத் ஆகியோர் கலந்து கொண்டனர்.