செக் பவுன்ஸ் வழக்குகள்; உச்ச நீதிமன்றம் வழங்கிய முக்கிய உத்தரவு
அதிகரித்து வரும் செக் பவுன்ஸ் வழக்குகளை கவனத்தில் கொண்ட உச்ச நீதிமன்றம் முக்கிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.
செக் பவுன்ஸ் வழக்குகள்: செக் பவுன்ஸ் தொடர்பாக மிகவும் கடுமையான விதிகள் உள்ளன. இந்நிலையில், செக் பவுன்ஸ் வழக்குகளை விரைந்து முடிக்க ஐந்து மாநிலங்களில் செப்டம்பர் 1 முதல் ஓய்வுபெற்ற நீதிபதிகளைக் கொண்ட சிறப்பு நீதிமன்றங்களை அமைக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சிறப்பு நீதிமன்றங்கள்
மகாராஷ்டிரா, டெல்லி, குஜராத், உத்தரபிரதேசம் மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் நிலுவையில் உள்ள வழக்குகள் அதிக அளவில் இருப்பதால், அங்கு சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கப்படும் என்று நாகேஸ்வர ராவ், நீதிபதி பி.ஆர்.கவாய் மற்றும் நீதிபதி எஸ்.ரவீந்திர பட் ஆகியோர் அடங்கிய நீதிமன்ற பிரிவு தெரிவித்து.
செப்டம்பர் 1, 2022க்குப் பிறகு சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கும் பணி தொடங்கும் எனவும் நீதிமன்ற பிரிவு கூறியுள்ளது. தற்போதைய உத்தரவின் நகலை குறிப்பிட்ட இந்த ஐந்து உயர் நீதிமன்றங்களின் பதிவாளர் ஜெனரலுக்கு நேரடியாக அனுப்ப வேண்டுமா என்பதை நீதிமன்றத்தின் பொதுச் செயலாளர் முடிவு செய்வார் என்றும், அவர் உடனடியாக நடவடிக்கைக்காக தலைமை நீதிபதிகள் முன் அதை ஆஜர்படுத்தலாம் என்றும் உச்சநீதிமன்ர பிரிவு கூறியது கூறியது.
மேலும் படிக்க | உடல் உறவுக்கு பின் திருமணத்துக்கு மறுப்பது மோசடியாகாது: மும்பை உயர்நீதிமன்றம்
இந்த உத்தரவு குறித்து இந்த மாநிலங்களின் உயர் நீதிமன்றங்களின் பதிவாளர் ஜெனரலுக்குத் தெரிவிக்குமாறு உச்ச நீதிமன்றம் அதன் பொதுச் செயலாளருக்கு உத்தரவிட்டது. இதனுடன், இந்த உத்தரவுக்கு இணங்க அவர் ஜூலை 21, 2022க்குள் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது. முன்னோடித் திட்டமாக, ஒவ்வொரு மாவட்டத்திலும் ஓய்வு பெற்ற நீதிபதிகளைக் கொண்ட நீதிமன்றம் இருக்க வேண்டும் என்று பரிந்துரைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தற்போது இந்த வழக்கு மீதான விசாரணை ஜூலை 28 ஆம் தேதி நடைபெறும். அதிக எண்ணிக்கையிலான காசோலை பவுன்ஸ் வழக்குகள் நிலுவையில் உள்ளதைக் கருத்தில் கொண்டு, அத்தகைய வழக்குகளை உடனடியாக முடிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. 31 டிசம்பர் 2019 நிலவரப்படி, நாட்டில் 2.31 கோடி குற்ற வழக்குகள் நிலுவையில் இருந்தன. இதில் 35.16 லட்சம் வழக்குகள் செக் பவுன்ஸ் வழக்குகள் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | ஆடைக்கு மேல் தொடுவது பாலியல் வன்முறை ஆகாது: மும்பை நீதிமன்றத்தின் வினோத தீர்ப்பு
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR