25 வயதுக்கு மேற்பட்ட மாணவர்களும் நீட் தேர்வு எழுதலாம் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மருத்துவ படிப்பிற்கான தேசிய நுழைவுத் தேர்வான நீட் தேர்வினை, பொதுப்பிரிவைச் சேர்ந்த 25 வயதுக்கு மேற்பட்ட மாணவர்களும் எழுதலாம் என உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது. மேலும் வயது வரம்பு தளர்வு என்பது இறுதி தீர்ப்பை பொறுத்தது என்றும் குறிப்பிட்டுள்ளது.


தற்போது நீட் தேர்வு எழுதும் பொதுப்பிரிவு மாணவர்களுக்கு குறைந்தப்பட்ச வயது வரம்பு 17 என்றும், அதிகப்பட்ச வயது வரம்பு 25-என்றும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதே வேலையில் இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு அதிகப்பட்ச வயது வரம்பு 30-ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


இந்நிலையில், நீட் தேர்வுக்கான வயது வரம்பில் தளர்வு வேண்டும் என கோரி பொதுநலன் மனு ஒன்று உச்சநீதிமன்றத்தில் முறையிடப்பட்டது. இந்த மனுவின் மீதான விசாரணை இன்று நடைபெற்றது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், 2019-ஆம் ஆண்டு நடைபெறும் நீட் தேர்வில் வயது வரம்பு எதுவும் கிடையாது. பொதுப்பிரிவில் 25-வயதுக்கு மேற்பட்ட மாணவர்களும் நீட் தேர்வு எழுதலாம் என உத்தரவு பிறப்பித்துனர். 


எனினும் இது இடைக்கால உத்தரவு தான் எனவும், இந்த வழக்கின் இறுதி தீர்ப்பு மாறும் பட்சத்தில், இந்த உத்தரவு செல்லுபடியாகாது. அதனால் வயது வரம்பு தளர்வு என்பது இறுதி தீர்ப்பை பொறுத்தது எனவும் தெரிவித்துள்ளனர். எனவே நீட் தேர்வை நடத்தும் அமைப்புகள் நீதிமன்ற தீர்ப்பினை உணர்ந்து செயல்பட வேண்டும் எனவும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர். 


இதற்கிடையில் புயலால் பாதிக்கப்பட்ட பகுதி மாணவர்கள் நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க கூடுதல் அவகாசம்கோரி தேசிய தேர்வு முகமைக்கு தமிழக அரசு கடிதம் எழுதியுள்ளது. நீட் தேர்விற்கு விண்ணப்பிக்க நாளையுடன் அவகாசம் முடியும் நிலையில் இன்று தமிழக அரசு கோரிக்கை கடிதம் எழுதியுள்ளது குறிப்பிடத்தக்கது.