புதுடில்லி: அயோத்தி (Ayodhya) வழக்கின் விசாரணை அக்டோபர் 17 (October 17) ஆம் தேதி வரை நடைபெறும் என்று உச்ச நீதிமன்றம் (Supreme Court) தெரிவித்துள்ளது. அக்டோபர் 17 ஆம் தேதிக்குள் அனைத்து தரப்பினரையும் தங்கள் வாதங்களை முடிக்க வேண்டும் என நீதிமன்றம் கேட்டுகொண்டு உள்ளது. முன்னதாக, வாதங்களை முடிக்க உச்சநீதிமன்றம் அக்டோபர் 18 வரை காலக்கெடுவை நிர்ணயித்திருந்தது குறிப்பிடத்தக்கது. ஆனால் அடுத்த வாரம் தசரா பண்டிக்கை விடுமுறை காரணமாக நீதிமன்றம் செயல்படாது. இந்த சூழலில், இப்போது அயோத்தி வழக்கில் வெறும் நான்கு நாட்கள் விசாரணை மட்டுமே எஞ்சியுள்ளது. இன்று 37வது நாள் விசாரணை நிறைவடைந்தது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அயோத்தியில், பாபர் மசூதி - ராம் ஜென்ம பூமி தொடர்பான 2.77 ஏக்கர் நிலம் தொடர்பான வழக்கில் சன்னி வக்பு வாரியம், இந்து மகா சபா மற்றும் நிர்மோகி அகாரா அமைப்புகள் நிலத்தை பகிர்ந்து எடுத்துக் கொள்ள அலகாபாத் உயர்நீதிமன்றம் (Allahabad High Court) கடந்த 2010 ஆம் ஆண்டில் தீர்ப்பளித்தது.


இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கில் மத்தியஸ்த முயற்சியும் தோல்வி அடைந்ததை அடுத்து, தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் (Ranjan Gogoi), நீதிபதிகள் டி.ஒய். சந்திரசூட் (DY Chandrachud), எஸ்.ஏ. பாப்டே (SA Bobde), அசோக் பூஷன் (Ashok Bhushan) மற்றும் அப்துல் நசீர் (SA Nazeer) ஆகியோர் அடங்கிய அரசியல் சாசன அமர்வு (Constitution Bench) முன் வழக்கின் விசாரணை நாள்தோறும் நடைபெற்று வருகிறது. விசாரணையானது இன்று 37ஆவது நாளை எட்டியுள்ளது. ஏற்கெனவே இந்த வழக்கு தொடர்பான வாதங்களை அக்டோபர் 18 ஆம் தேதிக்குள் முடித்துக் கொள்ளுமாறு நீதிபதிகள் தெரிவித்து இருந்தனர். 


இந்தநிலையில், 37வது விசாரணை நாளான இன்று அயோத்தி வழக்கின் வாதங்களை அனைத்து தரப்பினரும் அக்டோபர் 17 ஆம் தேதிக்குள் முடித்துக்கொள்ள வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதாவது 14 ஆம் தேதி ராஜீவ் தவானின் (Muslim) வாதங்கள் நிறைவுபெறும். அக்டோபர் 15-16 அன்று இந்து தரப்பு (Hindu Parties) பதில் அளிக்கும். அதன் பின்னர் 17 ஆம் தேதி நிவாரண வடிவமைத்தல் (Moulding of Relief ) குறித்து விவாதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.