கொரோனா தாக்கம், கைதிகள் விடுதலை: உச்ச நீதிமன்றம் உத்தரவு
சிறையில் தொற்று பரவுவதை தடுக்க உச்ச நீதிமன்றம் சனிக்கிழமை உத்தரவுகளை பிறப்பித்தது. தொற்றுநோயைக் கருத்தில்கொண்டு கடந்த ஆண்டு ஜாமீன் அல்லது பரோல் வழங்கப்பட்ட கைதிகள் அனைவரையும் உடனடியாக விடுவிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
புதுடெல்லி: இந்தியா கொரோனா தொற்றின் பிடியில் சிக்கித் தவித்துக்கொண்டு இருக்கிறது. மத்திய அரசும் மாநில அரசாங்கங்களும் தொற்றை கட்டுப்படுத்த பலவித நடவடிக்கைகளை எடுத்தது வருகின்றன.
அதிகரித்து வரும் கொரோனா தொற்றை (Coronavirus) கருத்தில் கொண்டு சிறைச்சாலைகளில் உள்ள கைதிகளின் எண்ணிக்கையை குறைத்து, சிறையில் தொற்று பரவுவதை தடுக்க உச்ச நீதிமன்றம் சனிக்கிழமை உத்தரவுகளை பிறப்பித்தது. தொற்றுநோயைக் கருத்தில்கொண்டு கடந்த ஆண்டு ஜாமீன் அல்லது பரோல் வழங்கப்பட்ட கைதிகள் அனைவரையும் உடனடியாக விடுவிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
தலைமை நீதிபதி என்.வி.ரமணா (NV Ramana) மற்றும் நீதிபதிகள் எல்.நாகேஸ்வர ராவ் மற்றும் சூர்ய காந்த் ஆகியோர் அடங்கிய பெஞ்ச், உச்சநீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் அமைக்கப்பட்ட மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் உயர் அதிகாரக் குழுக்களால் கடந்த மார்ச் மாதம் ஜாமீனில் வெளியேற அனுமதிக்கப்பட்ட கைதிகள் அனைவருக்கும் தாமதத்தைத் தவிர்ப்பதற்காக HPC களால் மறுபரிசீலனை செய்யப்படாமல் அதே நிவாரணம் வழங்கப்படும் என்று கூறியது. "மேலும், தொற்றுநோயைக் கட்டுப்படுத்த ,எங்கள் முந்தைய உத்தரவுகளுக்கு இணங்க, பரோல் வழங்கப்பட்ட கைதிகளுக்கு, 90 நாட்களுக்கு மீண்டும் பரோல் வழங்கப்பட வேண்டும்," என்று உச்ச நீதிமன்றத்தின் வலைத்தளத்தில் பெஞ்ச் பதிவேற்றிய உத்தரவில் சனிக்கிழமை கூறப்பட்டுள்ளது.
ALSO READ: 50% மேல் கிடையாது மராத்தா சமூகத்திற்கான இட ஒதுக்கீடு ரத்து செய்த உச்ச நீதிமன்றம்
ஒரு தீர்ப்பைக் குறிப்பிட்டு, அதிகபட்ச தண்டனை ஏழு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும் வழக்குகளில் சரியான விசாரணை இல்லாமல் இயந்திரத்தனமாக கைது செய்ய வேண்டாம் என்று உச்ச நீதிமன்றம் அதிகாரிகளை கேட்டுக்கொண்டது. இந்த விவகாரத்தில் தேசிய சட்ட சேவைகள் ஆணையத்தின் வழிகாட்டுதல்களை ஏற்றுக்கொண்டு புதிய கைதிகளை விடுவிப்பதை பரிசீலிக்க உயர் அதிகாரமுள்ள குழுக்களுக்கு உச்ச நீதிமன்ற (Supreme Court) உத்தரவு அறிவுறுத்தியது.
இந்தியாவில் கொரோனா தொற்றால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளால் நிலைமை மிகவும் தீவிரமாக உள்ளது. ஒற்றை நாள் தொற்றின் எண்ணிக்கை தினமும் அதிகரித்து வருகிறது. இதனுடன் இறப்பு எண்ணிக்கையும் பீதியைக் கிளப்பும் வகையில் மேல்நோக்கி சென்றுகொண்டிருக்கின்றது.
இந்தியாவில் மூன்றாவது நாளாக, ஒரு நாள் தொற்றின் அளவு 4 லட்சத்துக்கும் மேல் உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில், நாட்டில் 4200 கொரோனா நோயாளிகள் இறந்துள்ளனர். இது, இதுவரையிலான மிக அதிகமான ஒற்றை நாள் இறப்பு எண்ணிக்கையாகும்.
நேற்று இந்தியாவில் 4,01,217 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. 24 மணி நேரத்தில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இறந்தனர். இதனுடன் இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2,18,86,556 ஆக அதிகரித்துள்ளது. நாட்டில் சுமார் 37 லட்சம் பேர் சிகிச்சையில் உள்ளனர்.
ALSO READ: உச்ச நீதிமன்ற வளாகத்தில் கொரோனா சிகிச்சை மையம் அமைக்க அனுமதி அளித்தார் தலைமை நீதிபதி
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR