50% மேல் கிடையாது மராத்தா சமூகத்திற்கான இட ஒதுக்கீடு ரத்து செய்த உச்ச நீதிமன்றம்
மராத்தா சமூகத்திற்கு 50 சதவீதத்திற்கும் மேலான இட ஒதுக்கீடு வழங்குவதற்கு எந்த முகாந்திரமும் இல்லை என்று தெளிவுபடுத்திய உச்ச நீதிமன்றம், பொதுக் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் மராத்தா சமூகத்திற்கு இடஒதுக்கீடு அளிக்கும் செப்சி சட்டம் அரசியலமைப்பிற்கு விரோதமானது என்று நீதிமன்றம் கருதுகிறது. அதனால் மராத்தா சமூகத்தினருக்கான இடஒதுக்கீடு வழங்கிய மகாராஷ்டிரா அரசின் சட்டம் செல்லாது என அதிரடியாக உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
புதுடெல்லி, மே 5: மகாராஷ்டிரா அரசு இயற்றிய மராத்தா சமூகத்தினருக்கான கல்வி, வேலைவாய்ப்புகளில் இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை உச்ச நீதிமன்றம் புதன்கிழமை ரத்து செய்தது. இந்திரா சாவ்னி வழக்கில் மாநிலங்களில் இடஒதுக்கீடு அளவு 50 சதவீதத்தை மீறுவதாக இருக்க கூடாது என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது. இந்திர சாவ்னி தீர்ப்பால் நிர்ணயிக்கப்பட்ட 50 சதவீத அளவை மீறி கூடுதல் ஒதுக்கீடு வழங்குவதை நியாயப்படுத்த எந்தவொரு விதிவிலக்கான சூழ்நிலையும் முகாந்திரமும் இல்லை என்று கூறிய உச்ச நீதிமன்ற நீதிபதி அசோக் பூஷண் தலைமையிலான ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியலமைப்பு பெஞ்ச், 50 சதவீத உச்சவரம்பை மீறுவதற்கு அதிக இடஒதுக்கீடு வழங்க அனுமதிக்கவில்லை என தீர்ப்பு வழங்கியது.
"இந்திர சாவ்னி விதித்த உச்சவரம்பு வரம்பை 50 சதவிகிதத்திற்கு மேல் மீறுவது 14 மற்றும் 15 பிரிவுகளை மீறுவதாகும்" என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மராத்தா சமூகத்தைச் சேர்ந்தவர்களை கல்வி ரீதியாகவும் சமூக ரீதியாகவும் பின்தங்கியவர்களாக அறிவிக்க முடியாது என்று நீதிபதிகள் எல். நாகேஸ்வர ராவ், எஸ் அப்துல் நசீர், ஹேமந்த் குப்தா மற்றும் எஸ்.ரவீந்திர பட் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் ஏகமனதாக தீர்ப்பளித்தது.
ALSO READ | PMK: வன்னியர் இட ஒதுக்கீடுச் சட்டம் நிரந்தரமானது: அதை நீக்க முடியாது!
மராத்தா சமூகத்திற்கு 50 சதவீதத்திற்கும் மேலான இட ஒதுக்கீடு வழங்குவதற்கு எந்த முகாந்திரமும் இல்லை என்று தெளிவுபடுத்திய உச்ச நீதிமன்றம், பொதுக் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் மராத்தா சமூகத்திற்கு இடஒதுக்கீடு அளிக்கும் செப்சி சட்டம் அரசியலமைப்பிற்கு விரோதமானது என்று நீதிமன்றம் கருதுகிறது. அதனால் மராத்தா சமூகத்தினருக்கான இடஒதுக்கீடு வழங்கிய மகாராஷ்டிரா அரசின் சட்டம் செல்லாது என அதிரடியாக உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக்கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடர முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR