புதுடெல்லி: நீதிமன்றங்களில் தினமும் வழக்கு விசாரணைகள் துவங்கப்படும் முன் தேசிய கீதம் ஒலிபரப்பப்பட வேண்டும் என்று தொடரப்பட்ட மனுவை விசாரிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு தெரிவித்துவிட்டது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சினிமா திரையிடுவதற்கு முன் தேசிய கீதம் கட்டாயம் ஒலிபரப்ப வேண்டும் என சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.


இந்நிலையில், நீதிமன்றங்களிலும் வழக்கு விசாரணைக்கு முன் தேசிய கீதம் இசைக்க வேண்டும் என்று பாரதீய ஜனதா கட்சி பிரமுகரும் வழக்கறிஞருமான அஷ்வானி குமார் மனு தாக்கல் செய்தார். இந்த மனு சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள், தீபக் மிஸ்ரா, அமித்வா ராய் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர்  தனது  மனுவை உரிய முறையில் சமர்பிக்க வேண்டும் என்று மத்திய அரசின் அட்டார்னி ஜெனரல் தெரிவித்தார். இதையடுத்து மனுவை விசாரணைக்கு ஏற்க மறுத்தது உச்ச நீதிமன்றம்.