புகார் அளிப்பவர் பட்டியல் சமூகத்தைச் சேர்ந்தவர் என்ற அடிப்படையில் மட்டுமே , உயர் சாதியை சேர்ந்தவரை எதிர்த்து வழக்குத் தொடர முடியாது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

புகார் அளிப்பவர் பட்டியல் சமூகத்தை சேர்ந்தவராக இருப்பதன் காரணமாக, ஒரு உயர் சாதியைச் சேர்ந்த நபரின் சட்ட உரிமைகளை மறுக்க முடியாது என உச்ச நீதிமன்றம் (Supreme Court) தீர்ப்பளித்துள்ளது.


இந்த தீர்ப்பை அளித்த நீதிபதி ஹேமந்த் குப்தா, எஸ்சி / எஸ்டி சமூகத்தைச் சேர்ந்த ஒருவரை அவமானப்படுத்தும் நோக்கத்துடன் மட்டுமே ஒரு செயல் மேற்கொள்ளப்பட்டது என்பதைக் காட்டும் வரை, அவரை எதிர்த்து எஸ் சி எஸ்டி பாதுகாப்பு சட்டத்தின் கீழ் (SC/ST ACT) வழக்கை பதிவு செய்ய முடியாது என தீர்ப்பளித்துள்ளார்.


"பட்டியல் சாதி அல்லது பட்டியல் பழங்குடியினத்தைச் சேர்ந்தவர் என்பதன் காரணமாக ஏற்பட்ட அவமதிப்பு அல்லது அச்சுறுத்தலாக இல்லாவிட்டால், வேறு காரணத்திற்காக ஒரு நபருக்கு ஏற்படும் அனைத்து அவமானங்களும் அச்சுறுத்தல்களும், எஸ் எடி சட்டத்தின் கீழ் உள்ள குற்றமாக கருதப்படாது" என்று நீதிபதி கூறினார்.


இந்தச் சட்டத்தின் கீழ் ஒரு கிரிமினல் குற்றம் என்று ஒரு செயலை கூற வேண்டும் என்றால், அந்த செயல் பொதுவில் நடந்த செயலாக இருக்க வேண்டும். ஆனால் ஒரு வீட்டினுள் அல்லது ஒரு கட்டிடத்தின் நான்கு மூலைகளுக்குள் தனிப்பட்ட முறையில் நடந்த செயலுக்கு, இந்த சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ய இயலாது என முன்பு வழங்கிய தீர்ப்பை மீண்டும் நீதிமன்றம் உறுதிபடுத்தியுள்ளது.


ஒரு பெண் மீது சாதி ரீதியாக துஷ்பிரயோகம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட ஒரு ஆணின் மீதான குற்றவியல் வழக்குகளை ரத்து செய்த, நீதிமன்ற பிரிவு இந்த விளக்கங்களை அளித்தது.


உத்தரகண்ட் (Uttarakhand) மாநிலத்தின் பித்தோராகர் மாவட்டத்தில் ஒரு நிலம் தொடர்பாக இருவருக்கும் தகராறு இருப்பதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது, மேலும் இருவரும் தங்கள் உரிமைகளை உறுதிப்படுத்த பரஸ்பரம் எதிராக சிவில் வழக்குகளை தாக்கல் செய்திருந்தனர்.


எஸ்சி / எஸ்டி சட்டத்தின் கீழ் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டது, அவர் குற்றம் சாட்டப்பட்டவர் மற்றும் அவரது கூட்டாளிகள் தான் வயலில் பயிரிடுவதை வலுக்கட்டாயமாக தடுத்து நிறுத்தியதுடன், வேறு முறைகேடுகளில் ஈடுபட்டத்தாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.


வழக்கின் உண்மை நிலையை பார்க்கும்போது, ​​ஒரு வீட்டின் நான்கு சுவர்களுக்குள் நடந்த செயல் என்பதோடு மட்டுமல்லாமல், பொது இடத்தில் நடக்கவில்லை என்று பெஞ்ச் தீர்ப்பளித்தது. இது இரு தரப்பினருக்கும் இடையிலான நிலத்தகராறு வழக்கு என்றும், இது எஸ்சி எஸ் டியின்  சட்டத்தின் கீழ் வராது என்றும் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. 


எஸ்சி / எஸ்டி சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட குற்றச்சாட்டுகளில் இருந்து மனுதாரரை விடுவித்த நீதிமன்றம், இந்த வழக்கை, மிரட்டல் மற்றும் அத்துமீறல் ஆகிய குற்றங்களின் கீழ் வழக்கு தொடரப்படும் என கூறியுள்ளது.


ALSO READ | தமிழகத்தில் தனியார் வேலைகளில் 80% இட ஒதுக்கீடு எப்போது? - PMK கேள்வி...


தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR