கர்நாடக எம்எல்ஏ-க்களின் ராஜினாமாவை ஏற்க சபாநாயகருக்கு உத்தரவிட முடியாது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சபாநாயகரின் அதிகாரத்தில் உச்சநீதிமன்றம் தலையிட முடியாது எனவும், ராஜினாமா செய்த எம்.எல்.ஏ-க்களை, நாளை நடைபெறும் நம்பிக்கை வாக்கெடுப்பில் கலந்துக்கொள்ள நிர்பந்திக்க கூடாது எனவும் உச்சநீதிமன்றம் தனுத தீர்பில் குறிப்பிட்டுள்ளது.


தங்களுடைய ராஜினாமாவை ஏற்க சபாநாயகருக்கு உத்தரவிட வேண்டும் என கர்நாடக அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் தொடுத்த வழக்கில், கர்நாடக எம்எல்ஏ-க்களின் ராஜினாமாவை ஏற்க சபாநாயகருக்கு உத்தரவிட முடியாது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.



கர்நாடகாவில் 16 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா கடிதம் அளித்ததால் குமாரசாமி தலைமையிலான அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. ராஜினாமா முடிவை வாபஸ் பெறப்போவதாக அறிவித்த நாகராஜும் மும்பைக்கு சென்று அதிருப்தி எம்.எல்.ஏக்களுடன் இணைந்துவிட்டார். மேலும், ராஜினாமா கடிதத்தை திரும்பப் பெறும் பேச்சுக்கே இடமில்லை என்று எம்.எல்.ஏ சோமசேகர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.


இதனைத்தொடர்ந்து தங்களுடைய ராஜினாமாவை ஏற்க சபாநாயகருக்கு உத்தரவிட வேண்டும் என காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். விசாரணைக்கு பின்னர் இந்த வழக்கில் இன்று தீர்பளித்த உச்சநீதிமன்றம், கர்நாடக எம்எல்ஏ-க்களின் ராஜினாமாவை ஏற்க சபாநாயகருக்கு உத்தரவிட முடியாது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.