லஞ்ச வழக்குகளில் எம்பி எம்எல்ஏக்கள் விலக்கு கோர முடியாது: உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்றத்தில் பேசுவதற்காகவும் வாக்களிப்பதற்காகவும் லஞ்சம் பெறுதல் தொடர்பான வழக்கு விசாரணையில் இருந்து, எம்பி எம்எல்ஏக்களுக்கு விளக்கு கிடையாது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இந்திய உச்ச நீதிமன்றம், இன்று வழங்கியுள்ள முக்கியமான தீர்ப்பில், நாடாளுமன்ற உறுப்பினர்களும், சட்டமன்ற உறுப்பினர்களும், அவையில் வாக்கு செலுத்தவும், பேசுவதற்காகவும் லஞ்சம் வாங்கியது தொடர்பான வழியில் விசாரணையில் இருந்து, விலக்கு பெற முடியாது என்று கூறியுள்ளது. ஆயிரத்தி தொன்னுத்தி எட்டாம் ஆண்டு, டிவியின் நரசிம்மரா வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பை ரத்து செய்த உச்ச நீதிமன்றம், லஞ்சம் பெறுதல் நாடாளுமன்ற உரிமை என்கிறார் அது என்றும், 1998 ஆம் ஆண்டு, வழங்கப்பட்ட தீர்ப்பு, அரசியல் சாசனப் பிரிவு 105 மற்றும் 194 பிரிவுகளுக்கு முரணானது என்றும் உச்ச நீதிமன்றத்தின் ஏழு நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு கூறியுள்ளது. சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்றத்தில் பேசுவதற்காகவும் வாக்களிப்பதற்காகவும் லஞ்சம் பெறுதல் தொடர்பான வழக்கு விசாரணையில் இருந்து, எம்பி எம்எல்ஏக்களுக்கு விளக்கு கிடையாது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
லஞ்சம் வாங்கினால் குற்றம் தான்: உச்ச நீதிமன்றம்
நாடாளுமன்றம் மற்றும் சட்டப்பேரவைகளில், எதுவும் பேசவும் லஞ்சம் வாங்குவது என்பது பொது வாழ்க்கையின் நேர்மையை சீர்குலைக்கும் விஷயம் என்று உச்ச நீதிமன்றம் கூறுகிறது. நாடாளுமன்றம் மற்றும் சட்டசபையில் பேசுவதற்கும், வாக்களிக்கவும், மாநிலங்கள் அவை தேர்தல் உள்ளிட்டவைகளில் வாக்களிப்பதற்கு உறுப்பினர்கள் (எம்பி, எம்எல்ஏக்கள்) லஞ்சம் வாங்கினால் குற்றம்தான் எனவும், அத்தகைய உறுப்பினர்கள் மீது ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கலாம் என உச்சநீதிமன்ற அரசியல் சாசன பெஞ்ச் அதிரடியாக தீர்ப்பளித்துள்ளது.
ஜேஎம்எம் லஞ்ச ஊழல் வழக்கு
நாட்டை உலுக்கிய ஜேஎம்எம் லஞ்ச ஊழல் வழக்கில், ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா எம்.எல்.ஏ. சீதா சோரன், வாக்களிக்க லஞ்சம் வாங்கினார் என குற்றம் சாட்டப்பட்டது. இந்த வழக்கில் சீதா சோரன் 7 மாதம் சிறை தண்டனை அனுபவித் நிலையில் இந்த வழக்கை விசாரித்த ஜார்க்கண்ட் உயர்நீதிமன்றம், சீதா சோரன் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்ததை ரத்து செய்ய மறுத்தது. இதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த ரஞ்சன் கோகாய், தலைமையிலான 5 நீதிபதிகள் அடங்கிய பிரிவு 3:2 என்ற அடிப்படையில் மாறுபட்ட தீர்ப்புகளை அளித்தது. இதனையடுத்து அதிக நீதிபதிகளைக் கொண்ட அரசியல் சாசன பெஞ்சுக்கு சிபிஐ மேல்முறையீட்டு மனு வழக்கு மாற்றப்பட்டது.
எம்.பி, எம்.எல்.ஏக்களுக்கு சட்ட பாதுகாப்பு இருப்பதாக நடத்தப்பட்ட வாதம்
இந்நிலையில், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான 5 நீதிபதிகள் அடங்கிய பிரிவு இந்த வழக்கை 7 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன பிரிவுக்கு மாற்றியது. இந்த வழக்கின் விசாரணையில் சீதா சோரன் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ராஜூ ராமச்சந்திரன், நீதிமன்ற நடவடிக்கைகளில் இருந்து எம்.பி, எம்.எல்.ஏக்களுக்கு சட்ட பாதுகாப்பு இருப்பதாக வாதிட்டது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், 25 ஆண்டுகளுக்குப் பிறகு உச்ச நீதிமன்றம் தீர்ப்பை மறுபரிசீலனை செய்தது.
ஜனநாயகத்தை பாதுகாக்கும் தீர்ப்பு
உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பின் விளைவுகள் சட்டப் பாதைகளுக்கு அப்பால் நீண்டு, இந்தியாவின் ஜனநாயகக் கட்டமைப்பிற்குள் ஆழமாக எதிரொலிக்கும் என கூறப்படுகிறது. சட்ட நடவடிக்கையில் இருந்து பாதுகாப்பு என்ற கவசத்தை அகற்றியதன் மூலம், நாடாளுமன்றத்திலும் சட்டமன்றத்திலும் ஜனநாயகத்தை நிலைநிறுத்துதற்கான பொறுப்பு தான் முதன்மையானது என்ற கொள்கையை உச்ச நீதிமன்றம் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ