புதுடெல்லி: தீபாவளிக்கு முன்னதாக, பட்டாசு தயாரிப்புத் தொடர்பாக உச்ச நீதிமன்றம் முக்கிய உத்தரவு பிறப்பித்துள்ளது. பேரியத்தைப் பயன்படுத்தி பட்டாசு தயாரிப்பதையும் பயன்படுத்துவதையும் அனுமதிக்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் மீண்டும் ஒருமுறை வலியுறுத்தியுள்ளது. அத்துடன் பட்டாசு உற்பத்தி நிறுவனங்களின் கோரிக்கையையும் நீதிமன்றம் நிராகரித்தது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

உச்ச நீதிமன்றத்தில் பட்டாசு தயாரிப்பு தொடர்பாக, பட்டாசு உற்பத்தி ஆலைகள்  மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தன. பேரியம் பொருட்களை பயன்படுத்தி பட்டாசு தயாரித்து பயன்படுத்த வேண்டும் என அந்த மனுவில் கோரப்பட்டிருந்தது. சரவெடி மற்றும் பேரியம் மூலப்பொருளில் தயாராகும் பட்டாசுகளை தயாரிப்பதையும் பயன்படுத்துவதையும் அனுமதிக்க முடியாது என நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது. 


உச்ச நீதிமன்ற தீர்ப்பு


சுற்றுச்சூழலை பாதிக்காத பட்டாசுகளை வெடிக்கலாம்; அதுவும் 2 மணி நேரம் மட்டும் பட்டாசு வெடிக்க அனுமதி' என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தீபாவளி பண்டிகை என்றாலே, பட்டாசு தான் அனைவருக்கும் நினைவுக்கு வரும். உலகம் முழுவதும் பட்டாசு வெடித்து தீபாவளியை கொண்டாடுவது வழக்கம்.


இந்த ஆண்டு நவம்பர் 12ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதில் சரவெடி மற்றும் பேரியம் மூலப்பொருளில் தயாராகும் பட்டாசுகள் விற்பனைக்கு இந்த ஆண்டாவது அனுமதி கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன், பட்டாசு தயாரிப்பு ஆலைகள் உச்சநீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்தன.


இதனை விசாரித்த உச்சநீதிமன்றம், 'சுற்றுச்சூழலை பாதிக்காத பட்டாசுகளை வெடிக்கலாம்; அதுவும் 2 மணி நேரம் மட்டும் பட்டாசு வெடிக்க அனுமதி' என உத்தரவிட்டதுடன், பேரியம், சரவெடி தொடர்பான மனுக்களை தள்ளுபடி செய்தது. வெறும் 2 மணிநேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க சில ஆண்டுகளாக தொடர்ந்த உத்தரவே இந்த ஆண்டும் நீடிக்கிறது.


மேலும் படிக்க | பட்டாசு கொட்டகையில் பயங்கர தீ விபத்து..! ஒருவர் பலி - 5 பேர் மருத்துவமனையில் அனுமதி


உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பானது, தீபாவளி பண்டிகையை எதிர்நோக்கி காத்திருந்த பட்டாசு தொழிலாளர்களுக்கு வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியில் பட்டாசுக்கு விதிக்கப்பட்ட தடை குறித்து உச்ச நீதிமன்றம் எதுவும் கூறவில்லை. அதாவது பட்டாசுக்கு டெல்லி அரசு விதித்துள்ள பூரண தடை (பசுமைப் பட்டாசு தடை உட்பட) தொடரும். பட்டாசுக்கு முற்றிலும் தடை விதிக்கப்படாத மாநிலங்களில், பசுமைப் பட்டாசுகளை பயன்படுத்தி தீபாவளியைக் கொண்டாடலாம்.


டெல்லியில் பட்டாசுக்கு தடை தொடரும்


இந்த தீபாவளிக்கு டெல்லியில் அனைத்து வகையான பட்டாசுகளுக்கும் தடை தொடரும் என டெல்லி சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கோபால் ராய் தெரிவித்துள்ளார்.


"... இந்த குளிர்காலத்தில் அனைத்து வகையான பட்டாசுகளின் உற்பத்தி, விற்பனை, சேமிப்பு மற்றும் பயன்பாடு ஆகியவை டெல்லியில் தடை செய்யப்படும்," என்று அமைச்சர் கோபால் ராய் தெரிவித்திருந்தார். பட்டாசு விற்பனை, சேமிப்பு அல்லது உற்பத்திக்கான உரிமங்கள் டெல்லி காவல்துறையால் வழங்கப்படாது என்று இந்த மாதத் தொடக்கத்திலேயே அறிவித்துவிட்டார்.


பசுமைப் பட்டாசு என்றால் என்ன? 


காற்று மாசு அதிகரித்திருப்பது, சுற்றுச்சூழல் மாசை அதிகரித்துவிட்டது. இது நீண்டகால விளைவுகளை ஏற்படுத்தும் என்பதோடு, இந்தியாவில் உயிரிழப்புகள் அதிகரித்ததால், அதைக் குறைக்க அறிமுகப்படுத்தப்பட் பசுமைப் பட்டாசு திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.


இது வழக்கமாக பயன்படுத்தப்படும் பட்டாசுகளை விட 40 முதல் 50% குறைவாக புகை மற்றும் நச்சை வெளியிடுபவை. சென்னை சி.எஸ்.ஐ.ஆர் இன் கீழ் இயங்கி வரும் நீரி அமைப்பு இதற்கான ஃபார்முலாவைக் கண்டுபிடிக்கும் ஆராய்ச்சி வேலைகளை துவங்கியது. அதன் விளைவாகவே இந்தியாவில் பசுமைப் பட்டாசுகள் அறிமுகமாகின. உலகத்திலேயே பசுமைப்பட்டாசு என்ற கான்செப்ட்டை முதன்முதலில் சிந்தித்த, செயல்படுத்திய, பயன்படுத்திய, உற்பத்தி செய்த ஒரே நாடு இந்தியாதான்.


மேலும் படிக்க | மகளிர் இடஒதுக்கீடு மசோதா மாநிலங்களவையிலும் நிறைவேறியது


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ