மத்திய அரசுக்கு எதிராக CBI இயக்குநர் அலோக்வர்மா தொடர்ந்த வழக்கில் இன்று உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மத்திய அரசால் கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்ட அலோக் வர்மா CBI இயக்குனராக நீடிக்கலாம் என்று கூறி மத்திய அரசின் உத்தரவை ரத்து செய்து உச்சநீதி மன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. இந்த தீர்ப்பு மோடி அரசுக்கு விழுந்த மற்றொரு அடியாக கருதப்படுகிறது.



CBI இயக்குநர்களிடையே நடைபெற்று வந்த பனிப்போர் காரணமாக, CBI இயக்குனர்  பணியியில் இருந்து கட்டாய விடுப்பில் அலோக்வர்மா அனுப்பி வைகப்பட்டார். தன்னை கட்டாய விடுப்பில் அனுப்பி வைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து, அலோக்வர்மா மத்திய அரசின் நடவடிக்கையை எதிர்த்து உச்சநீதி மன்றத்தில் வழக்கு தொடுத்தார். 


இந்த வழக்கின் விசாரணை முடிவடைந்த நிலையில் இன்று இந்த வழக்கின் தீர்ப்பு வழங்கப்பட்டது. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் இல்லாத நிலையில்,  இந்த வழக்கின் தீர்ப்பு உச்சநீதிமன்றத்தின் நீதிமன்ற எண் 12-ல் நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல் வழங்கினார்.


இன்று வழங்கப்பட உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி CBI இயக்குநரை கட்டாய  விடுமுறையில் அனுப்பி வைத்த மத்திய அரசின் நடவடிக்கை சரியானது அல்ல என குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் மத்திய புலனாய்வு ஆணையத்தால்(CVC) வழங்கப்பட்ட உத்தரவுகளையும் உச்சநீதி மன்றம் ரத்து செய்து உத்தரவிட்டது. இதனையடுத்து CBI இயக்குநராக அலோக் வர்மா தொடரலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.



மேலம், மத்திய அரசு சம்பந்தமான எந்த வொரு கொள்கை முடிவுகளையும் அலோக் வர்மா எடுக்கக்கூடாது எனவும், உச்சநீதிமன்றத்தின் இன்றைய தீர்ப்பில் மத்திய அரசு தலையிட கூடாது எனவும் குறிப்பிட்டுள்ளது. 


உச்சநீதிமன்றத்தின் இன்றைய தீர்ப்பு காரணாமக CBI தற்காலிக இயக்குனராக உள்ள நாகேஸ்வரராவ் பதவி கேள்விக்குறியாகி உள்ளது!