காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான வழக்கை சுப்ரீம் கோர்ட் இன்று விசாரிக்கிறது. கர்நாடக அரசு வினாடிக்கு 2000 கன அடி நீரை காவிரியிலிருந்து தமிழகத்திற்கு திறந்துவிட வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் கடந்த வருடம் பிறப்பித்த உத்தரவை இதுவரை கர்நாடகா மதிக்கவில்லை. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்நிலையில், கர்நாடகாவிடமிருந்து பயிர் நஷ்ட ஈடாக ரூ.2480 கோடியை பெற்றுத்தருமாறு சுப்ரீம் கோர்ட்டில் தமிழகம் வழக்கு தொடர்ந்தது. விசாரணை நடத்திய அமிதவா ராய் மற்றும் கன்வில்கர் ஆகிய நீதிபதிகள் அடங்கிய பெஞ்ச் அடுத்த உத்தரவு வரும்வரை 2000 கன அடி நீரை திறந்துவிட உத்தரவிட்டது. 


இந்நிலையில் வழக்கு விசாரணை இன்று சுப்ரீம் கோர்ட்டில் நடைபெற உள்ளது.