பசுப் பாதுகாவலர்கள் எனக்கூறி எந்த ஒரு குடிமகனும் சட்டத்தை கையில் எடுக்க முடியாது என உச்சநீதிமன்றம் அறிவுரை!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பசுப் பாதுகாவலர்கள் என்ற பெயரில் பொதுமக்கள் மீது நடத் தப்படும் வன்முறை சம்பவங்கள் குறித்து உபி, ராஜஸ்தான், அரியானா ஆகிய மூன்று மாநிலங்களின் தலைமை செயலாளர்களும் நேரில் ஆஜராகி அறிக் கையை தாக்கல் செய்ய வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. 


இதையடுத்து, பசுப் பாதுகாவலர்கள் எனக்கூறி பலர் வன்முறை மற்றும் கொலை போன்ற சம்பவங்களில் ஈடுபட்டனர். இதை கண்டித்து சமீபத்தில் பிரதமர் மோடி நாட்டின் சட்டத்தை கையில் எடுக்கும் உரிமை யாருக்கும் இல்லை என்று தெரிவித்திருந்தார்.



இதை தொடர்ந்து, விஹெச்பி அமைப்பின் செய்திதொடர்பாளர் வினோத் பன்சால் சமீபத்தில், கண்டனம் தெரிவித்திருந்தார். இதையடுத்து, இன்று உச்சநீதிமன்றம் பசுப் பாதுகாவலர்கள் எனக்கூறி எந்த ஒரு குடிமகனும் சட்டத்தை கையில் எடுக்க முடியாது என்றும் பசு பாதுகாப்பு என்ற பெயரில் வன்முறை தாக்குதலில் ஈடுபட யாருக்கும் உரிமையில்லை எனவும் தெரிவித்துள்ளது.