குஜராத் சூரத் பயிற்சி மையத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 22 ஆக அதிகரித்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சூரத் நகரில் சார்த்தனா பகுதியில் உள்ள வணிக வளாகத்தில் இரண்டாவது தளத்தில் செயல்பட்டு வந்த டுட்டோரியல் பயிற்சி சென்டரில் தீவிபத்து ஏற்ப்பட்டது. இந்த விபத்தில் தப்பிக்க பல மாணவர்கள் மாடியிலிருந்து கீழே குதித்தனர். அதில் பலருக்கு காயம் பலமாக ஏற்பட்டு உள்ளது. மேலும் சிலர் உயிர் இழந்து உள்ளனர். 


இந்த தீவிபத்தில் சிக்கி அங்குள்ள பயிற்சி வகுப்பில் இருந்த 20 மாணவ, மாணவிகள் உடல் கருகி உயிரிழந்தனர். 16 பேர் காயமடைந்தனர்.


இந்நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 2 பேர் நேற்று பரிதாபமாக உயிரிழந்தனர். இதையடுத்து பலி எண்ணிக்கை 22 ஆக உயர்ந்துள்ளது. இதுதொடர்பாக விசாரணை நடத்திய போலீசார், கட்டிடத்தில் பயிற்சி வகுப்பு நடத்திய பார்காவ் புதானி என்பவரை கைது செய்துள்ளனர்.